குண்டு மழை பொழியும்... ஜாக்கிரதை! பொதுமக்களுக்கு கவர்னர் எச்சரிக்கை
ரஷ்ய குண்டு மழை பொழிவதற்கான ஆபத்து மிக அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் ஜாக்கிரதையாக பாதுகாப்பான இடத்தில் இருக்குமாறு கார்கிவ் பிராந்திய கவர்னர் வலியுறுத்தியுள்ளார்.
கார்கிவ் கவர்னர் Oleh Synyehubov சமூக வலைதளத்தில் வெளியிட்ட செய்தியில், பிராந்தியத்தில் தொடர்ந்து குண்டு மழை பொழியக்ககூடும் என்பதால், நகர மக்கள் தொடர்ந்து பாதுகாப்பான இடத்தில் இருக்குமாறு எச்சரித்துள்ளார்.
கார்கிவ் பிராந்தியத்தில் குண்டு மழை பொழிவதற்கான ஆபத்து மிகவும் அதிகம். முடிந்தவரை பாதுகாப்பான இடத்தில் இருங்கள்.
உங்கள் சொந்த பாதுகாப்பை புறக்கணிக்காதீர்கள், தேவையில்லாமல் தெருவில் இருக்காதீர்கள்.
தொடரும் உக்ரைன் வெற்றி.. புடின் அணு ஆயுதங்களை பயன்படுத்துவார் என அமெரிக்கா அச்சம்
உக்ரைன் ஆயுத படைகளின் முயற்சியால் பிராந்தியத்தில் ரஷ்ய துருப்புகள் தாக்குதலை குறைத்திருப்பதாக குறிப்பிட்ட Synyehubov, ஏர் அலாரம் இல்லாத நேரத்திலும். உஷாராக இருங்கள், பாதுகாப்பு தான் பிரதானம் என தெரிவித்துள்ளார்.
நேற்று, ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் அதன் வான் பாதுகாப்பு அமைப்புகள் கார்கிவ் பிராந்தியத்தில் இரண்டு உக்ரேனிய Su-24m விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்தது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளால் உக்ரைனுக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் மீது அதன் படைகள் தாக்கியதாகவும் அமைச்சகம் கூறியது குறிப்பிடத்தக்கது.