தொடரும் உக்ரைன் வெற்றி.. புடின் அணு ஆயுதங்களை பயன்படுத்துவார் என அமெரிக்கா அச்சம்
ரஷ்ய அதிபர் புடின் உக்ரைனுக்கு எதிரான போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்துவார் என அமெரிக்க செனட்டர் கவலை தெரிவித்துள்ளார்.
தனியார் ஊடகம் ஒன்றுடனான நேர்காணலில் பேசிய செனட்ட வெளியுறவுத்துறை கமிட்டி தலைவர் பாப் மெனெண்டஸ் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ராணுவத்தின் தொடர் வெற்றி காரணமாக அதிபர் புடின் அணு ஆயுதங்களை பயன்படுத்துவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.
புடின் தனது மரியாதையை காப்பாற்ற அணு ஆயுதங்களை பயன்படுத்துவார் என நான் அஞ்சுகிறேன்.
குண்டு மழை பொழியும்... ஜாக்கிரதை! பொதுமக்களுக்கு கவர்னர் எச்சரிக்கை
உக்ரேனியர்கள் பெரும் வெற்றியை விட, புடின் தோற்பதால், சொந்த நாட்டில் தனது பெயரை காப்பாற்றிக்கொள்ள, அவர் ஏதேனும் விபரீத முடிவு எடுப்பதற்கான ஆபத்து அதிகம் என்பதே என முக்கிய கவலைகளில் ஒன்று.
எனவே அதன் விளைவாக ரசாயன, உயிரியல் அல்லது அணு ஆயுத தாக்குதலுக்கான வாய்ப்பு அதிகரிக்கூடும் என பாப் மெனெண்டஸ் எச்சரித்துள்ளார்.