மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்துடன்... அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிவித்தார் பிரதமர்
PM announces date for new UK-EU summit: அடுத்த பிரித்தானிய ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டுக்கான திகதியை அறிவித்தார் பிரித்தானிய பிரதமர்.
லேபர் அரசு பிரித்தானியாவில் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே, பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கம் காட்டிவருகிறது.
முந்தைய பிரதமரான சர் கெய்ர் ஸ்டார்மரைப்போலவே, இப்போதைய பிரதமரான ஆன்டி பர்னாமும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கம் காட்டுவது மட்டுமல்ல, பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையக்கூடும் என்றும் கூறியுள்ளார்.
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்துடன்...
சமீபத்தில் பிபிசி ஊடகத்துக்கு பேட்டியளித்த பிரதமர் ஆன்டி பர்னாம், பிரெக்சிட்டால் பிரித்தானியாவுக்கு நன்மையை விட, பாதிப்புதான் அதிகம் என்று கூறியிருந்தார்.

ஆகவே, ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளை சரி செய்ய தான் முயற்சி செய்ய விரும்புவதாகவும், பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையக்கூடும் என்றும் கூறியுள்ளார் ஆன்டி பர்னாம்.
அடுத்த கட்ட நடவடிக்கை
சர் கெய்ர் ஸ்டார்மர் பிரித்தானியாவின் பிரதமராக பதவி வகித்த நேரத்தில், பிரித்தானிய ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாடு ஒன்று குறித்து திட்டமிடப்பட்டது.

ஜூலை மாதம் அந்த மாநாடு நடைபெற இருந்த நிலையில், பிரித்தானிய அரசியலில் ஏற்பட்ட மாற்றங்களால் ஸ்டார்மர் பதவி விலக, உச்சி மாநாடு தள்ளிப் போயிற்று.
ஸ்டார்மரின் இடத்தில் ஆன்டி பர்னாம் பிரதமராக பொறுப்பேற்க, ஐரோப்பிய ஒன்றியம் தொடர்பில் அவரும் அதே நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதால், ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவது குறித்து அவரும் கருத்துக்கள் தெரிவித்துவருகிறார்.
அத்துடன், பிரித்தானிய ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாடு குறித்தும் அறிவிப்பு வெளியிட்டுள்ளார் ஆன்டி பர்னாம்.
ஆம், அடுத்த மாதம், அதாவது, நவம்பர் மாதம் 20ஆம் திகதி, பிரித்தானிய ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாடு நடைபெறும் என அறிவித்துள்ளார் ஆன்டி பர்னாம்.
அந்த மாநாட்டில், உணவு மற்றும் பானங்கள் தொடர்பிலான ஒப்பந்தங்கள், எரிசக்தி அமைப்புகள், இளைஞர் திட்டங்கள் மற்றும் புலம்பெயர்தல் ஆகிய விடயங்களில் ஒத்துழைப்பு முதலான பல்வேறு விடயங்கள் முக்கிய இடம்பெறும் என்றும் கூறியுள்ளார் ஆன்டி பர்னாம்.
மேலும், இப்போதிருக்கும் இதே நிலையில் பிரித்தானியா நீடிப்பது நல்லதல்ல என்றும் கூறியுள்ளார் ஆன்டி பர்னாம்!