பதவியைக் காப்பாற்றிக்கொள்ள..இரண்டு தீர்ப்பு நாட்களை எதிர்கொள்ளும் ஸ்டார்மர்
பிரித்தானிய பிரதமரான கெய்ர் ஸ்டார்மர் அடுத்த வாரம் இரண்டு தீர்ப்பு நாட்களை எதிர்கொள்கிறார்.
பாதுகாப்பு சோதனையில் தோல்வி
மாண்டல்ஸன் ஊழல் தொடர்பாக, பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் திங்கட்கிழமை அன்று நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்க உள்ளார்.
தனது பதவியைக் காப்பாற்றப் போராடும் ஸ்டார்மர், மாண்டல்ஸன் பாதுகாப்பு சோதனையில் தோல்வியடைந்ததை நம்பர் 10க்கு தெரிவிக்காததற்காக சர் ஆலி மீது குற்றம்சாட்டியுள்ளார்.
அதே சமயம் பிரதமர் ஸ்டார்மர் அடுத்த வாரம் ஒன்று அல்ல, இரண்டு தீர்ப்பு நாட்களை எதிர்கொள்கிறார்.

கடும் விமர்சனம்
திங்கட்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர்களை அவர் எதிர்கொள்ளும் நிலையில், அடுத்த நாள் லார்ட் மாண்டல்ஸனின் பாதுகாப்பு அனுமதி தோல்வியுற்றதில், தனது பங்கு குறித்து விளக்க சர் ஆலி ராபின்ஸ் நாடாளுமன்றத்தில் தோன்றுகிறார்.
தனது வலுவான தற்காப்பு வாதத்தைத் தொடங்குவதன் மூலம் ஸ்டார்மர் மேலும் கடுமையாக விமர்சிக்கத் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |