வீட்டு வாடகை தொடர்பில் சேன்ஸலர் முன்வைத்த நல்ல திட்டம்: ஏற்க மறுத்த பிரதமர் இல்லம்
வாடகை வீடுகளில் குடியிருப்போருக்கு ஆதரவாக பிரித்தானிய சேன்ஸலரான ரேச்சல் ரீவ்ஸ் திட்டம் ஒன்றை முன்வைத்தார்.
ஆனால், அதை அமுல்படுத்த முடியாது என பிரதமர் இல்லம் கூறிவிட்டது!
வாடகை வீடுகளில் குடியிருப்போருக்கு ஆதரவாக...
ஈரான் போரால் விலைவாசி உயர்ந்துவரும் நிலையில், வாடகை வீடுகளில் குடியிருப்போரின் கஷ்டத்தை கொஞ்சம் குறைக்கும் வகையில் பிரித்தானிய சேன்ஸலரான ரேச்சல் ரீவ்ஸ் திட்டம் ஒன்றை முன்வைத்தார்.

அதாவது, வாடகை வீடுகளில் குடியிருப்போருக்கு உதவும் வகையில், ஒரு ஆண்டுக்கு வீட்டு உரிமையாளர்கள் வீட்டின் வாடகையை உயர்த்தாமல் இருக்கவேண்டும் என்பது ரேச்சலின் திட்டம் ஆகும்.
ஏற்க மறுத்த பிரதமர் இல்லம்
ஆனால், ரேச்சலின் திட்டத்தை அமுல்படுத்த முடியாது என பிரதமர் இல்லம் தெரிவித்துவிட்டது.
ரேச்சலின் திட்டம் குறித்து பேசிய பிரதமர் இல்ல செய்தித்தொடர்பாளர், ரேச்சலின் திட்டத்தை அமுல்படுத்தும் நோக்கம் எதுவும் இல்லை என்றும், கட்டணங்களை குறைத்தல் போன்ற நடவடிக்கைகள் மூலமாகவே வாடகை வீடுகளில் குடியிருப்போருக்கு உதவ இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ரேச்சலின் திட்டம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.
சிலர் அவரது திட்டத்தை ஆதரிக்கிறார்கள், சிலர் எதிர்க்கிறார்கள். லேபர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான கிறிஸ் கர்ட்டிஸ் என்பவர், வாடகை உயர்வை தடுத்து நிறுத்துவது எல்லாம் வேலைக்கு ஆகாது, விலைவாசியைக் குறைக்கவேண்டுமானால், முதலில் எல்லோருக்கும் போதுமான வீடுகள் வேண்டும், ஆகவே, மக்களுக்கு போதுமான அளவில் வீடுகளைக் கட்டுவதன் மூலம் பிரச்சினைகளை தீர்க்கப்பாருங்கள் என கொந்தளித்துவிட்டார்.
ஏற்கனவே ஒரு முறை இதேபோல வீட்டு வாடகைகளைக் கட்டுப்படுத்தும் திட்டம் முன்வைக்கப்பட்டபோதும் இப்படித்தான் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோபம் கொண்டார்கள்.
காரணம் என்னவென்றால், பிரித்தானியாவில் வாடகைக்கு விடப்பட்டுள்ள வீடுகளின் சொந்தக்காரர்கள் பலர் நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான். ஆக, வீட்டு வாடகையை உயர்த்துவதை தடுத்தால் அவர்களுக்கு கோபம் வராதா என்ன?
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |