கனடாவுக்கு புலம்பெயரும் ஆசையிலிருப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி
Mark Carney Signals Canada May Raise Immigration Levels Again: கனடா அரசு மீண்டும் புலம்பெயர்தலை அதிகரிக்கக்கூடும் என கனடா பிரதமர் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
பல ஆண்டுகளுக்குப் பின், கனடாவின் புலம்பெயர்தல் அமைப்பு மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாக தெரிவித்துள்ள கனடா பிரதமர் மார்க் கார்னி, கனடா அரசு மீண்டும் புலம்பெயர்தலை அதிகரிக்கக்கூடும் என சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
கனடா பிரதமர் கூறியது என்ன?
கனடா, பிரித்தானியா போன்ற நாடுகள் புலம்பெயர்வோர் எண்ணிக்கையைக் குறைப்பது தொடர்பிலேயே பேசிக்கொண்டிருந்த நிலையில், கனடா பிரதமர் மார்க் கார்னியின் பேச்சில் ஒரு மாற்றம் தெரிகிறது.

ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த கார்னி, பல ஆண்டுகளுக்குப் பின் கனடாவின் புலம்பெயர்தல் அமைப்பு மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாக தெரிவித்துள்ளதுடன், புலம்பெயர்தலை அதிகரித்தல் வெகு தொலைவில் இல்லை என்றும் கூறியுள்ளார்.
எந்த அளவுக்கு புலம்பெயர்தல் அதிகரிக்கப்படும் என்பது போன்ற விளக்கம் எதையும் கார்னி கொடுக்கவில்லை என்றாலும், இனி கட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையில் புலம்பெயர்தல் அதிகரிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான புலம்பெயர்தல் எண்ணிக்கை குறித்து கனடா அரசு இன்னும் ஒரு மாதத்தில் அறிவிக்கவேண்டியுள்ளது.
இந்த நேரத்தில் கனடா பிரதமரான மார்க் கார்னி, புலம்பெயர்தலை அதிகரித்தல் வெகு தொலைவில் இல்லை என்று கூறியுள்ளதால், கனடாவுக்கு புலம்பெயரும் ஆசையிலிருப்பவர்களுக்கு அது ஒரு நல்ல செய்தியாகவே அமையக்கூடும் என்பதில் சந்தேகமில்லை.