அரசியலை விட்டே விலகுகிறேன் - ராமதாஸ் அறிவிப்பு
அரசியல் துறவறம் மேற்கொள்வதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
அரசியலை விட்டு விலகிய ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே கடந்த ஒரு ஆண்டாக கருத்து வேறுபாடு நிலவி வந்தது.

சில வாரங்களுக்கு முன்னர், தைலாபுரம் தோட்டத்தில் உள்ள இல்லத்திற்கு அன்புமணி ராமதாஸ் அவரது மனைவி சௌமியா அன்புமணி மற்றும் மகள்களுடன் சென்று ராமதாஸை சந்தித்தனர்.
ராமதாஸ் அன்புமணியை கண்ணீர் மல்க கட்டி தழுவி வரவேற்றார். இருவருமிடையே இருந்த மோதல் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், இன்று ராமதாஸின் 88ஆவது பிறந்த நாள் என்பதால் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள இல்லத்திற்கு அன்புமணி ராமதாஸ் சென்று ஆசி பெற்றார்.
இதனையடுத்து நடைபெற்ற பிறந்த நாள் நிகழ்வில் பேசிய ராமதாஸ், "எனது 88வது பிறந்தநாளான இன்று முதல் அரசியல் துறவறம் மேற்கொள்கிறேன். இனி, அரசியல் பேசமாட்டேன், அரசியலில் தலையிட மாட்டேன்.

என்னை சந்திக்க வருபவர்கள் என்னிடம் அரசியல் பேச வேண்டாம். இனி அரசியலை அன்புமணி பார்த்துக்கொள்வார்" என பேசியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |