போக்கோ நிறுவனத்தின் புதிய சி சீரிஸ் ஸ்மார்ட்போன் அசத்தலான அம்சங்களுடன் அறிமுகம்!
போக்கோ நிறுவனம் இந்தியாவில் போக்கோ சி31 ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி 3 ஜிபி + 32 ஜிபி விலை ரூ. 8,499 என்றும் 4 ஜிபி + 64 ஜிபி விலை ரூ. 9,499 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் அக்டோபர் 2 ஆம் தேதி பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் முறையே ரூ. 7999 மற்றும் ரூ. 8999 விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
மேலும் போக்கோ சி31 ஸ்மார்ட்போன் ஷேடோ கிரே மற்றும் ராயல் புளூ நிறங்களில் கிடைக்கிறது. அதுமட்டுமின்றி இதில் பல சிறம்பம்சங்களை கொண்டுள்ளது. அவை,
- இதில் 6.53 இன்ச் ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. ஸ்கிரீன்
- மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர்
- 13 எம்பி பிரைமரி கேமரா
- 2 எம்பி மேக்ரோ கேமரா
- 2 எம்பி டெப்த் கேமரா
- 5 எம்பி செல்பி கேமரா
- பின்புறம் கைரேகை சென்சார்
- 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 10 வாட் சார்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது.