ஒரு கப் அவல் இருந்தால் போதும்.., மொறுமொறு நகெட்ஸ் செய்யலாம்
மழைக்காலத்தில் சூடான டீயுடன் சேர்த்து மொறுமொறு ஸ்னாக்ஸ் சாப்பிட நிறைவாக இருக்கும்.
அதேபோல், குழந்தைகள் பள்ளி முடிந்து பசியோடு வரும்பொழுதும் சூடான ஸ்னாக்ஸ் சாப்பிடவேண்டும் என்று எண்ணுவார்கள்.
அந்தவகையில், ஒரு கப் அவல் வைத்து சுவையான மொறுமொறு நகெட்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- அவல்- 1 கப்
- உருளைக்கிழங்கு- 2
- வெங்காயம்- 2
- குடைமிளகாய்- 1
- பச்சை பட்டாணி- ¼ கப்
- கொத்தமல்லி இலை- சிறிதளவு
- சீரகத்தூள்- ½ ஸ்பூன்
- உலர் மாங்காய் தூள்- ½ ஸ்பூன்
- மிளகாய் தூள்- ½ ஸ்பூன்
- கரம் மசாலா- ¼ ஸ்பூன்
- அரிசி மாவு- 2 ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- சோள மாவு- 2 ஸ்பூன்
- பிரட் தூள்- 4 ஸ்பூன்
- எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் அவலை தண்ணீரில் நன்றாக கழுவி ஒரு நிமிடம் ஊற வைத்து வடிகட்டி வைக்கவும்.
பின் உருளைக்கிழங்கை வேகவைத்து ஒரு பாத்திரத்தில் சேர்த்து நன்கு மசித்து வைத்துக்கொள்ளவும்.
அடுத்து இதனுடன் நாம் ஊறவைத்த அவலை சேர்த்து நன்கு கலந்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் இதில் வெங்காயம் குடைமிளகாய் பச்சை பட்டாணி மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.
இதனையடுத்து உலர் மாங்காய் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, சீரகத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும்.
இதன் பிறகு அரிசி மாவை சேர்த்து சிறிய சிறிய உருண்டைகளாக பிடித்து ஒரு தட்டில் வைத்துக்கொள்ளவும்.
பின் ஒரு கிண்ணத்தில் தண்ணீர் மற்றும் கான்பிளவர் மாவை சேர்த்து கலக்க வேண்டும்.
இப்போது எடுத்து வைத்த சிறிய உருண்டைகளை இந்த கான்பிளவர் கலவையில் நன்றாக முக்கி எடுத்து பிரட் தூள்களில் பிரட்டி எடுக்கவும்.
இதற்கு பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு சூடான பிறகு உருண்டைகளை கடாயில் சேர்த்து பொன்னிறமாக பொறித்து எடுத்தால் ஆரோக்கியமான அவல் நகெட்ஸ் ரெடி.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |