நூற்றுக்கணக்கான மாணவிகளுக்கு அளிக்கப்பட்ட விஷம்: பின்னணியில் பிரித்தானிய தூதுவரா?

London Iran
By Arbin Mar 12, 2023 12:01 PM GMT
Report

ஈரானில் நூற்றுக்கணக்கான பாடசாலை மாணவிகளுக்கு விஷம் அளிக்கப்பட்ட விவகாரத்தின் பின்னணியில் பிரித்தானிய தூதுவர் இருப்பதாக அங்குள்ள செய்தி ஊடகங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.

வெளிநாட்டு சதி - ஈரான் நிர்வாகம்

ஈரானின் பல்வேறு பாடசாலைகளில் திடீரென்று மாணவிகள் நோய்வாய்ப்பட்டு நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டனர். இந்த விவகாரம் வெளிநாட்டு சதி என்றே ஈரான் நிர்வாகம் கூறி வந்தது.

நூற்றுக்கணக்கான மாணவிகளுக்கு அளிக்கப்பட்ட விஷம்: பின்னணியில் பிரித்தானிய தூதுவரா? | Poisoning Schoolgirls Iran Accuses Brit Ambassador

Credit: gov.uk

ஆனால் Mashregh செய்தி ஊடகமானது மாணவிகள் நோய்வாய்ப்பட்டதற்கு முதன்மை காரணம் பிரிட்டிஷ் தூதர் சைமன் ஷெர்க்ளிஃப் என வெளிப்படையாக குற்றஞ்சாட்டியுள்ளது.

அதில், ஈரானில் உள்ள பிரித்தானிய தூதுவர், நம் நாட்டில் மாணவிகளுக்கு விஷம் கொடுத்த சம்பவத்தில் நேரடியாக ஈடுபட்டுள்ளார் என குறிப்பிட்டுள்ளது. மட்டுமின்றி, இது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட ரகசிய விசாரணையில், வெளிநாட்டு சதி இருப்பதாகவும் அந்த செய்தி ஊடகம் வெளிப்படுத்தியுள்ளது.

ஆனால் இந்த குற்றச்சாட்டானது நாட்டில் அதிகரித்து வரும் கோபத்திற்கு மத்தியில் பழியை திசைதிருப்பும் ஈரான் நிர்வாகத்தின் முயற்சி என கூறுகின்றனர். மட்டுமின்றி, மாணவிகளுக்கு விஷம் கொடுத்ததே ஈரான் நிர்வாகம் தான், சமீப மாதங்களாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவரும் மாணவிகளை திசைதிருப்பவே இந்த செயல் எனவும் ஈரானிய மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

நூற்றுக்கணக்கான மாணவிகளுக்கு அளிக்கப்பட்ட விஷம்: பின்னணியில் பிரித்தானிய தூதுவரா? | Poisoning Schoolgirls Iran Accuses Brit Ambassador

@reuters

உண்மையான காரணம்

கடந்த நவம்பர் மாதத்தில் இருந்தே விஷம் கொடுக்கப்பட்ட சம்பவம் வெளிவரத்தொடங்கியுள்ளது. சுமார் 1,000 மாணவிகள் இது தொடர்பில் புகார் அளித்துள்ளனர். மூச்சுத்திணறல், கூச்ச உணர்வு, குமட்டல் உள்ளிட்டவை அறிகுறிகளாக கூறுகின்றனர்.

நூற்றுக்கணக்கான மாணவிகள் மருத்துவ சிகிச்சையை நாடியும், இதுவரை உண்மையான காரணம் கண்டறியப்படவில்லை. 100க்கும் மேற்பட்ட நகரங்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் குறைந்தது 8,000 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நிபுணர்கள் தரப்பு மதிப்பிட்டுள்ளனர்.

நூற்றுக்கணக்கான மாணவிகளுக்கு அளிக்கப்பட்ட விஷம்: பின்னணியில் பிரித்தானிய தூதுவரா? | Poisoning Schoolgirls Iran Accuses Brit Ambassador

@AFP

இதனிடையே, இந்த விவகாரத்தின் பின்னனியில் ஈரானுகான பிரித்தானிய தூதுவர் இருப்பதாக கூறும் அந்த செய்தி ஊடகம் காரணத்தை மட்டும் குறிப்பிடவில்லை என்றே தெரியவந்துள்ளது.

மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
மரண அறிவித்தல்

வாதரவத்தை, Leamington Spa, United Kingdom

31 Oct, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், திருகோணமலை, வவுனியா

03 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கிளிச்சி-ச ous ஸ்-போயிஸ், France

04 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US