ரஷ்யா மீது புதிய நடவடிக்கைகள் எடுக்காததற்கு ஜேர்மனி தான் காரணம்! போட்டுடைத்த போலந்து
ரஷ்யா மீது கடுமையான புதிய நடவடிக்கைகள் எடுக்காததற்கு ஜேர்மனி தான் காரணம் என போலந்து குற்றம்சாட்டியுள்ளது.
உக்ரைனின் புச்சா நகரில் பொதுமக்கள் கொன்று குவிக்கப்பட்டு சாலைகளில் சடலங்கள் கிடக்கும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு ரஷ்யா படைகள் தான் காரணம் என குற்றம்சாட்டி வரும் மேற்கத்திய நாடுகள், ரஷ்யா மீது இன்னும் கடுமையான புதிய பொருளாதார தடைகள் விதிக்க வேண்டும் வலியுறுத்தியுள்ளன.
இதனிடையே, ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்கத் தவறியதற்கு ஜேர்மனி தான் காரணம் என போலந்து பிரதமர் Mateusz Morawiecki குற்றம்சாட்டியுள்ளார்.
ரஷ்ய போர்க் கப்பலை ஏவுகணையால் தாக்கி அழித்த உக்ரைன்!
நான்காவது முறையாக ஹங்கேரி பிரதமராக பொறுப்பேற்றுள்ள விக்டர் ஓர்பன், ரஷ்யா மீது நட்புறவை வெளிப்படுத்திய போதிலும், புதிய நடவடிக்கைகளுக்கு ஹங்கேரி ஆதரவாக தான் இருக்கிறது.
ரஷ்யா மீதான புதிய கடுமையான பொருளாதார தடைகள் விதிப்பதற்கு ஜேர்மனி தான் முக்கிய தடையாக இருக்கிறது என போலந்து பிரதமர் Mateusz Morawiecki தெரவித்துள்ளார்.