போலந்து சாலையில் அதிர்ச்சி சம்பவம்: அடக்க ஊர்தியில் இருந்து விழுந்த உடலால் பரபரப்பு!
போலந்தில் அடக்கம் செய்யப்பட வேண்டிய உடல் அமரர் ஊர்தியில் இருந்து கீழே விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போலந்து சாலையில் பரபரப்பு
போலந்தின் தென் கிழக்கு பகுதியில் உள்ள ஸ்டாலோவா வோலா-வுக்கு (Stalowa Wola) இறுதிச் சடங்கு செய்ய எடுத்து செல்லப்பட்ட போது, உடல் தவறுதலாக கீழே விழுந்தது சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் உள்ளூர் அடக்க ஊர்தி நிறுவனமான ஹேடிஸ்(Hades) பொது மன்னிப்பு கோரியுள்ளது.
வாகனத்தில் உள்ள பூட்டும் செயல்பாட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த அசம்பாவிதம் ஏற்பட்டு இருப்பதாக அடக்க ஊர்தி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
மேலும் இந்த சம்பவத்தால் ஏற்பட்ட அதிர்ச்சி மற்றும் வருத்தத்திற்கும் அடக்க ஊர்தி நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.
அத்துடன் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் என்றும், தங்கள் நிறுவனம் இறந்தவர்களுக்கு எப்போதும் சிறந்த மரியாதை காட்டுவதாகவும், தற்போது அரங்கேறியுள்ள சம்பவம் தங்கள் நிறுவனத்தின் தரத்தை பிரதிபலிக்காத ஒரு சம்பவம் சம்பந்தப்பட்ட நிறுவனம் அவர்களது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.
பதறிப்போன வாகன ஓட்டுநர்
இந்த சம்பவம் நடைபெற்ற வெள்ளிக்கிழமை நகர சாலையில் வாகன ஓட்டிய நபர் சாலையில் உடல் கிடப்பதை பார்த்து, நாம் தான் யாரையோ வாகனத்தில் மோதி விட்டதாக பயந்துள்ளார்.
சாலையில் கிடந்த உடலின் புகைப்படங்களை உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |