புடின் அளித்த நெருக்கடி... ஐரோப்பிய நாடொன்றில் களமிறங்கும் நேட்டோ படைகள்
இந்த வாரத்தில் ரஷ்ய இராணுவம் இரண்டாவது முறையாக ட்ரோன் அத்துமீறலை நடத்திய நிலையில், போலந்தில் நேட்டோ படைகளை களமிறக்க அணுமதி அளிக்கப்பட்டுள்ளது.
போலந்து நிர்வாகம்
ருமேனியாவுக்குள் ரஷ்ய ட்ரோன்கள் அத்துமீறி நுழைந்ததை அடுத்து, இது போரை விரிவு படுத்தும் நடவடிக்கை என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி குற்றஞ்சாட்டியதன் பின்னர் போலந்து நிர்வாகம் இந்த முடிவுக்கு வந்துள்ளது.
புதன்கிழமை ரஷ்யாவின் ட்ரோன் ஊடுருவலைத் தொடர்ந்து போலந்து ஜனாதிபதி கரோல் நவ்ரோக்கி உறுதியான உறுதிமொழி ஒன்றை அளித்திருந்தார். மேலும், உக்ரைன் மீதான மற்றொரு தாக்குதலின் போது புடின் ருமேனிய வான்வெளியில் ட்ரோன்களை பறக்கவிட்டதும் F-16 போர் விமானங்கள் வட்டமிடத் தொடங்கின.
அத்துடன், உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கியதிலிருந்து பாதுகாப்பு கூட்டணியின் உறுப்பு நாடொன்று தாக்குதல் நடத்தியது இதுவே முதல் முறை.
ஜெலென்ஸ்கி எச்சரிக்கை
இதனையடுத்து ஆபரேஷன் ஈஸ்டர்ன் சென்ட்ரி என போலந்து நாட்டில் நேட்டோ படைகள் களமிறக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, சனிக்கிழமை அண்டை நாடான உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து,
ருமேனியாவின் எல்லைக்குள் ஒரு ட்ரோன் நுழைந்ததை ருமேனியாவின் பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியது. ஆனால் இந்த அத்துமீறல் என்பது தவறுதலாக நடந்தது அல்ல, ரஷ்யாவின் இந்த நகர்வு போரை விரிவுபடுத்துவதாகும் என மேற்கத்திய நாடுகளை ஜெலென்ஸ்கி எச்சரித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |