உக்ரைனுக்கு ஆதரவு அளிக்கும் நாடுகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிடும் ரஷ்யா: போலந்து பிரதமர் எச்சரிக்கை
Poland Prime minister warns Russia’s Striking plan: உக்ரைனுக்கு ஆதரவு அளிக்கும் நாடுகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக போலந்து பிரதமர் எச்சரித்துள்ளார்.
போலந்து பிரதமர் எச்சரிக்கை
உக்ரைனுக்கு ஆதரவு வழங்கும் நாடுகள் மீது ரஷ்யா ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருவதாக போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க்(Donald Tusk) எச்சரித்துள்ளார்.
ரஷ்யாவின் இந்த சதி திட்டத்தில் போலந்தும் தாக்கப்படலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த எச்சரிக்கையை வழங்கிய உளவு அமைப்புகளின் பெயர்களை வெளியிடாமல், தற்போது உக்ரைன்-ரஷ்யா போரானது எந்த திசையை நோக்கி செல்கிறது என்பதை போலந்து பிரதமர் வெளிப்படுத்தியுள்ளார்.

நேட்டோ உறுப்பு நாடுகளின் எல்லைக்கு அருகே ரஷ்ய ராணுவத்தின் நடவடிக்கைகள் தீவிரமடைந்து வரும் நிலையில் போலந்து பிரதமர் இந்த எச்சரிக்கையை தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் இந்த அச்சுறுத்தல் போலந்து நாட்டுடன் நின்று விடவில்லை. சமீபத்தில் ஜேர்மனியின் லீப்ஜிக் விமான நிலையத்தில் வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த அத்துமீறிய தாக்குதலுக்கு ரஷ்யா தான் காரணம் என்று ஜேர்மன் அதிகாரிகள் பகிரங்கமாக குற்றம் சாட்டி வருகின்றனர்.