உளவுத்துறை எச்சரித்த சூழலில்..போலந்து வான்வெளியில் ஊடுருவிய ரஷ்ய ஹெலிகொப்டர்
Poland military said russian helicopter entered airspace: போலந்தின் வான்வெளியில் ரஷ்ய இராணுவ ஹெலிகொப்டர் நுழைந்ததாக அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் Mi-8 ரக ஹெலிகொப்டர் போலந்து நாட்டின் வான்வெளியில் நுழைந்ததாக அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது.
ரஷ்யா தாக்குதல் நடத்தக்கூடும்
நேட்டோ நாடுகளின் மீது சில மாதங்களில் ரஷ்யா தாக்குதல் நடத்தக்கூடும் என ஐரோப்பிய உளவுத்துறை தலைவர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
நேட்டோவின் உறுப்பு நாடான போலந்து, தனது அண்டை நாடான உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் தொடர்பாக, தனது வான்வெளியில் எந்தவொரு ஊடுருவலுக்கும் எதிராக உயர் எச்சரிக்கை நிலையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
ஊடுருவிய ஹெலிகொப்டர்
இந்த நிலையில், ரஷ்யாவின் கலினின்கிராட் பகுதியில் இருந்து ஒரு ரஷ்ய இராணுவ ஹெலிகொப்டர், தங்கள் நாட்டின் வான்வெளியில் ஊடுருவியதாக போலந்து இராணுவம் கூறியுள்ளது.
Mi-8 ரக ஹெலிகொப்டர் என்ற குறித்த ஹெலிகொப்டர், போலந்தின் வான்வெளியில் 42 வினாடிகள் பறந்துள்ளது. அதிகபட்சமாக சுமார் 300 மீற்றர் ஆழத்திற்குள் நுழைந்ததாக போலந்து இராணுவ செயல்பாட்டுக் கட்டளை மையம், தங்களது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளது.
மேலும் அந்த பதிவில், "போர் விமானங்கள் விரைந்து அனுப்பப்பட்டன; மேலும் தரைப்படைகளும், ஆயுதங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. இந்த சம்பவத்தின் தன்மை, ரஷ்யா மீண்டும் ஒருமுறை நமது வான் பாதுகாப்பு அமைப்பின் தயார்நிலையை சோதித்து வருவதைக் காட்டுகிறது" எனவும் கூறப்பட்டுள்ளது.