2 பில்லியன் டொலர் ஒப்பந்தம்! அமெரிக்கா-போலந்தின் புதிய மூலோபாய கூட்டணி
தொழில்நுட்ப உதவிகளுக்காக அமெரிக்காவுடன் போலந்து 2 பில்லியன் டொலர் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
அமெரிக்கா-போலந்து ஒப்பந்தம்
நாட்டிற்கான மூலோபாய உதவிகளைப் பெற போலந்து அரசாங்கம் அமெரிக்காவுடன் 2 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒரு முக்கியமான ஒப்பந்தத்தை அறிவித்துள்ளது.
குறிப்பாக போலந்து நாட்டின் பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்தவும், நேட்டோவின் கிழக்கு எல்லையில் முக்கிய பங்கு வகிக்கவும் இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும்.
ஏவுகணை பாதுகாப்பு மற்றும் அமெரிக்காவுடனான நெருக்கமான ஒத்துழைப்பு ஆகியவை தேசிய பாதுகாப்பிற்கு மிக முக்கியமானவை என்று இந்த ஒப்பந்தம் தொடர்பில் போலந்து பாதுகாப்பு அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அனுப்பிய தகவலில், ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பு 2 பில்லியன் டொலர் என்று உறுதிப்படுத்தினார்.
பாதுகாப்பு செலவினங்களை அதிகரிக்க முடிவு
2022 ஆம் ஆண்டில் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்ததால், போலந்து அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடும்போது பாதுகாப்பு செலவினங்களில் நேட்டோவின் முன்னணி நாடாக உருவெடுத்துள்ளது.
2024 ஆம் ஆண்டில் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.1% ஐ பாதுகாப்புக்காக ஒதுக்க நாடு உறுதியளித்துள்ளது.
மேலும் 2025 ஆம் ஆண்டில் இதை 4.7% ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |