மிகவும் பயங்கரமான துயரம்... ஜேர்மனியிடம் டிரில்லியன் டொலர் இழப்பீடு கோரிய நாடு
இந்த விவகாரத்தில் போலந்து அரசாங்கம் உத்தியோகப்பூர்வமாக எந்த கருத்தையும் வெளியிடவில்லை
பேரிழப்பை ஈடு செய்ய ஜேர்மனியிடம் டிரில்லியன் டொலர் இழப்பீடு கோர இருப்பதாக போலந்து
இரண்டாம் உலகப்போர் காரணமாக தங்கள் நாட்டுக்கு ஏற்பட்ட பேரிழப்பை ஈடு செய்ய ஜேர்மனியிடம் டிரில்லியன் டொலர் இழப்பீடு கோர இருப்பதாக போலந்து அறிவித்துள்ளது.
போலந்தின் PiS கட்சியின் தலைவர் Jaroslaw Kaczynski செவ்வாய்க்கிழமை குறித்த கருத்தை பதிவு செய்துள்ளார். இதே கருத்தை 2019ல் பதிவு செய்த PiS கட்சி, அப்போது 850 பில்லியன் டொலர் இழப்பீடு கேட்க இருப்பதாக கூறியிருந்தது.
@ap
2015ல் ஆட்சியை கைப்பற்றிய பின்னர் பல்வேறு சூழ்நிலைகளில் PiS கட்சி இழப்பீடு தொடர்பில் கருத்து தெரிவித்து வந்துள்ளது. ஆனால் இந்த விவகாரத்தில் போலந்து அரசாங்கம் உத்தியோகப்பூர்வமாக எந்த கருத்தையும் வெளியிடவில்லை என்பது மட்டுமின்றி இழப்பீடும் கோரவில்லை.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை, PiS கட்சியின் தலைவர் Jaroslaw Kaczynski தெரிவிக்கையில், தற்போது தங்கள் கட்சி அறிவித்துள்ள 1.32 டிரில்லியன் டொலர் இழப்பீடு என்பது மிக குறைவான தொகை மட்டுமே என்றார்.
இரண்டாம் உலகப்போர் தொடங்கிய பின்னர் நீண்ட 83 ஆண்டுகள் நாஜிகளின் பிடியில் போலந்து சிக்கியிருந்ததாக குறிப்பிட்டுள்ள அவர், அது தொடர்பான விரிவான அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது என தெரிவித்துள்ளார்.
@Agencja Wyborcza
போரின் முதல் இலக்காக இருந்த நாடு, அண்டை நாடான ஜேர்மனியால் முழுமையாக ஈடுசெய்யப்படவில்லை என்று போலந்தின் வலதுசாரி அரசாங்கம் வாதிட்டு வருகிறது.
இரண்டாம் உலகப்போரினால் ஏற்பட்ட இழப்புகள் தொடர்பில் பதிவு செய்யப்பட்ட விரிவான அறிக்கையானது பிரதமர் மற்றும் முக்கிய தலைவர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.
1939 செப்டம்பர் 1ம் திகதி நாஜி ஜேர்மனி குண்டு வீச்சில் ஈடுபட்டதுடன் போலந்து மீது படையெடுப்பை முன்னெடுத்தது. தொடர்ந்து நீண்ட 5 ஆண்டுகள் கொடூரமான தாக்குதலை போலந்து மீது முன்னெடுத்தது நாஜி ஜேர்மனி.
போலந்தின் வரலாற்றிம் மிகவும் மோசமான துயரம் இரண்டாம் உலகப்போர் என குறிப்பிட்டுள்ளார் போலந்து ஜனாதிபதி Andrzej Duda. நாஜிகள் முதன்முதலாக தாக்குதலை முன்னெடுத்த பகுதியில் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
@ap
ஜேர்மனி மீதான PiS கட்சியின் இந்த கடும்போக்கு, பல கட்டங்களில் இரு நாடுகளுக்குமான உறவில் விரிசலையும் ஏற்படுத்தியது. மேலும், உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை அடுத்து, உக்ரைனுக்கு ஆதரவளிக்க ஜேர்மனி தவறியதும், ரஷ்யாவின் எரிவாயுவை அதிகமாக நம்பியதும் போலந்தை கொந்தளிக்க வைத்துள்ளது.
இரண்டாம் உலகப்போரின் போது மூன்று மில்லியன் போலந்து யூதர்கள் உட்பட சுமார் ஆறு மில்லியன் போலந்து மக்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.