ஜேர்மன் எல்லையில் பாதுகாப்பு சோதனைகளை துவக்கியுள்ள நாடு
போலந்து நாடு, ஜேர்மனி மற்றும் லிதுவேனியாவுடனான அதன் எல்லைகளில் தற்காலிக சோதனைகள் மேற்கொள்ள இருப்பதாக சமீபத்தில் தெரிவித்திருந்தது.
ஜேர்மன் எல்லையில் பாதுகாப்பு சோதனைகள்
போலந்து நாடு, ஜூலை மாதம் 7ஆம் தேதி முதல், ஜேர்மனி மற்றும் லிதுவேனியாவுடனான அதன் எல்லைகளில் தற்காலிக சோதனைகள் மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்திருந்தது.
ஜேர்மன் சேன்சலரான பிரெட்ரிக் மெர்ஸும், தான் போலந்து பிரதமரான டொனால்ட் டஸ்குடன் எல்லை பாதுகாப்பு தொடர்பில் விவாதித்ததாகவும், எல்லைகளில் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சொன்னதுபோலவே, போலந்து நாடு ஜேர்மன் எல்லையில் அமைந்துள்ள 52 எல்லை கடக்கும் பகுதிகளில் நேற்று முதல் சோதனைகளை நடத்தத் துவங்கியுள்ளது.
இந்த சோதனைகள் ஆகத்து மாதம் 5ஆம் திகதி வரை அமுலில் இருக்கும். போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் கூறுகையில், இந்த நடவடிக்கை சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் எல்லை கடப்பதைக் குறைப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும், அதனால் போலந்து மக்களுக்கும் ஐரோப்பிய ஒன்றிய மக்களுக்கும் எந்த இடைஞ்சலும் இருக்காது என்றும் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |