ரஷ்ய ட்ரோன் தாக்குதல் ஏற்படுத்திய அச்சம்: போலந்து நாட்டு மக்கள் எடுத்துவரும் நடவடிக்கைகள்
சமீபத்தில் ரஷ்ய ட்ரோன்கள் போலந்து நாட்டுக்குள் அத்துமீறிய சம்பவம் உலக அரசியலில் பரபரப்பை உருவாக்கியுள்ள நிலையில், அது போலந்து மக்களுக்கும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.
ஆகவே, போலந்து மக்கள் தங்கள் பாதுகாப்புக்காக பல்வேறு நடவடிக்கைகளைத் துவக்கியுள்ளார்கள்.
போலந்து நாட்டு மக்கள் எடுத்துவரும் நடவடிக்கைகள்
வட போலந்தில், ரஷ்ய எல்லையிலிருந்து ஆறு கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள தனது வீட்டைச் சுற்றி அகழிகள் அமைத்துவருகிறார், அலுவலக மேலாளராகப் பணியாற்றிவரும் Agnieszka Jedruszak.
தாக்குதல் நடந்தால், தன் 13 வயது மகன் உட்பட தனது குடும்பத்தை பாதுகாப்பதற்காக தான் இந்த நடவடிக்கையைத் துவக்கியுள்ளதாக தெரிவிக்கிறார் Agnieszka.
அத்துடன், Agnieszkaவும், அவரைப்போலவே ஆயிரக்கணக்கான போலந்து நாட்டு மக்களும் தாமாக முன்வந்து ராணுவ பயிற்சி பெற தங்கள் பெயர்களை பதிவு செய்துவருகிறார்கள்.
2025ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் மட்டும் 20,000க்கும் அதிகமான பொதுமக்கள் தாமாக முன்வந்து ராணுவ பெற தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளார்கள்.
இந்த பயிற்சி பெறும் மக்கள் அனைவரும் உடனடியாக போருக்குச் செல்வார்கள் என்று பொருளில்லை. தங்கள் பகுதிகளில் பகுதி நேர பணியில் ஈடுபட இருக்கும் அவர்கள், அதீத அச்சுறுத்தல் ஏற்படும் நேரங்களில் மட்டும் அவசர உதவிக்கு அழைக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |