எல்லை பாதுகாப்பு தொடர்பில் ஜேர்மனியும் போலந்து நாடும் எடுத்துள்ள முடிவு
போலந்து நாடு, இம்மாதம், அதாவது, ஜூலை மாதம் 7ஆம் தேதி முதல், ஜேர்மனி மற்றும் லிதுவேனியாவுடனான அதன் எல்லைகளில் தற்காலிக சோதனைகள் மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளது.
ஜேர்மனியும் போலந்து நாடும் எடுத்துள்ள முடிவு
ஜேர்மன் சேன்சலரான பிரெட்ரிக் மெர்ஸ், தான் போலந்து பிரதமரான டொனால்ட் டஸ்குடன் எல்லை பாதுகாப்பு தொடர்பில் விவாதித்ததாகவும், எல்லைகளில் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் கூறுகையில், இந்த நடவடிக்கை சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் எல்லை கடப்பதைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.
போலந்து ஜேர்மன் எல்லையில் கட்டுப்பாடுகளை தற்காலிகமாக அமுல்படுத்துவது அவசியம் என்று கருதுகிறோம் என்று கூறிய அவர், கட்டுப்பாடற்ற புலம்பெயர்ந்தோர் இருபுறமும் எல்லை கடப்பதை அது கட்டுப்படுத்தும் என்றும் கூறினார்.
இந்த முடிவு மக்களின் தடையற்ற பயணம் தொடர்பில் சில பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை நாங்கள் அறிவோம், ஆனால், வேறு வழியில்லை என்றும் டஸ்க் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |