ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல்... நேட்டோவின் ஆதரவைக் கோரவுள்ள போலந்து
Poland to request Nato support: போலந்து நேட்டோவின் ஆதரவைக் கோரவுள்ளது.
வெள்ளிக்கிழமை பகல் இரண்டு ரஷ்ய ஏவுகணைகளும் ஒரு ட்ரோனும் நேட்டோ வான்வெளியை அத்டுமீறியுள்ளதாக போலந்து அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
நேட்டோ படைகள்
போலந்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தின் அருகே வெள்ளிக்கிழமை அதிகாலையில் ஏவுகணை தாக்கியதை அடுத்து, அக்கிராம மக்கள் மொத்தம் அதிர்ச்சியடைந்தனர்.

உள்ளூர் நேரப்படி காலை சுமார் 6:35 மணியளவில், உக்ரைன் எல்லையருகே உள்ள பில்கோராஜ் மாகாணத்தின் சிலிகா அருகே ஒரு வெடிப்புச் சம்பவம் பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டது.
இச்சம்பவம் ஏற்கனவே சர்வதேச தாக்கங்களை ஏற்படுத்தி வரும் நிலையில், 'ஆபரேஷன் ஈஸ்டர்ன் சென்ட்ரி'க்கு ஆதரவளிக்க கூடுதல் நேட்டோ படைகளையும் ஆயுதங்களையும் போலந்து கோரும் என்று நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் கோசினியாக்-கமிஷ் கூறியுள்ளார்.
மேலும், இந்தச் சம்பவம் தற்செயலானதல்ல என்று குறிப்பிட்ட கோசினியாக்-கமிஷ், இது உக்ரைன் ஆதரவு நாடுகளின் கூட்டணி (coalition of the willing) நடத்திய பயிற்சி நடைபெற்ற அதே நாளில்தான் நிகழ்ந்தது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால், ரஷ்யா ஏவுகணை மற்றும் ட்ரோன் விவகாரம் வெறும் தற்செயலானது என குறிப்பிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், இதைப் பெரிதுபடுத்த வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, வெள்ளிக்கிழமையன்று போலந்துக்குள் ரஷ்ய ஏவுகணை ஒன்று தாக்கியது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று பிரித்தானியாவின் பிரதமர் ஆன்டி பர்னாம் கூறியுள்ளார்.
பிரித்தானியாவின் பாதுகாப்புச் செயலாளர் வெஸ் ஸ்ட்ரீட்டிங் தெரிவிக்கையில், இது மிகவும் தீவிரமான விவகாரம்; நான் விரைவில் போலந்து நாட்டு நண்பர்களைச் சந்திக்கவுள்ளேன். ரஷ்யாவின் சட்டவிரோதப் போரின் தாக்கம் உக்ரைன் முழுவதும் உணரப்படுவதுடன், அண்டை நாடுகளிலும் அதன் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்றார்.
இராணுவ அதிகாரிகளுடன்
இந்த நிலையில், சீனாவில் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜி ஜின்பிங்குடன் விளாடிமிர் புடின் நடத்திய பலவீனமான சந்திப்புகளுக்குப் பிறகு, போலந்து னீது இந்தத் தாக்குதலை அவர் தொடங்கியிருக்கலாம் என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.

போலந்தின் நோவி லிபோவியெக் நகரில் தாக்குதல் நடந்த இடத்தில் காவல்துறையினரும் தீயணைப்பு வீரர்களும் உள்ளனர். உக்ரைன் எல்லையருகே விழுந்த மேலும் குறைந்தது இரண்டு பொருட்களை விசாரித்து வருவதாக போலந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவற்றில் ஒன்று ஏவுகணை என்றும் மற்றொன்று ஜெட் ட்ரோன் என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது. போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க், இச்சம்பவம் குறித்து விவாதிப்பதற்காக அரசாங்க அமைச்சர்கள், பாதுகாப்புத் தலைவர்கள் மற்றும் இராணுவ அதிகாரிகளுடன் ஒரு கூட்டத்தை நடத்த உத்தரவிட்டுள்ளார்.
இந்த மாதத் தொடக்கத்தில், போலந்து மற்றும் கலினின்கிராட் இடையேயான எல்லையில் ரஷ்யாவின் ஆத்திரமூட்டும் முயற்சியை, போலந்துப் படைகளும் எல்லைக் காவல்படையும் தடுத்து நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.