ஹங்கேரியில் கவிழ்ந்த போலந்து சுற்றுலா பயணிகள் பேருந்து: 12 பேர் வரை உயிரிழப்பு
ஹங்கேரியில் நடந்த கொடூரமான சாலை விபத்தில் 12 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
சாலை விபத்து
நள்ளிரவில் கிழக்கு ஹங்கேரியில் உள்ள M3 நெடுஞ்சாலையில் நிகழ்ந்த கோரமான சாலை விபத்தில் 12 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

போலந்தில் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் பேருந்து இந்த விபத்தில் மிகுந்த சேதமடைந்துள்ளது. இதில் 10 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.
விபத்துக்குள்ளான பேருந்து நியிரெட்டிகாசா நகரை நோக்கிச் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர குழியில் சிக்கி கவிழ்ந்தது.
விபத்தில் உயிர் தப்பிய பேருந்து சாரதியை காவல்துறையினர் கைது செய்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணையில், பேருந்து சாரதி தூக்க கலக்கத்தில் பேருந்து ஓட்டி இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹங்கேரி பிரதமர் இரங்கல்

பேருந்து விபத்தை ஹங்கேரி பிரதமர் பீட்டர் மகியார் ஞாயிற்றுக்கிழமை தன்னுடைய சமூக வலைதள பக்கம் வாயிலாக உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும் தன்னுடைய பதிவில் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தன்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள் என தெரிவித்துள்ளார்.
அத்துடன் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் என்னுடைய நன்றிகள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |