ஐஸ்லாந்தில் 8 ஆண்டுகளுக்கு பிறகு பார்க்கப்பட்ட துருவக் கரடி: சுட்டுக் கொன்ற பொலிஸார்!
ஐஸ்லாந்தில் 8 ஆண்டுகளுக்கு பிறகு பார்க்கப்பட்ட துருவக் கரடி பொலிஸ் அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டது.
8 ஆண்டுகளுக்கு பிறகு தென்பட்ட துருவ கரடி
ஐஸ்லாந்தின் வடமேற்கு பகுதியில் 8 ஆண்டுகளுக்கு பிறகு பார்க்கப்பட்ட துருவ கரடி 2024 செப்டம்பர் 19 அன்று பொலிஸ் அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்டது.
இது 2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு நாட்டில் இந்த இனத்தைப் பார்த்த முதல் சந்தர்ப்பமாகும்.
கரடி உள்ளூர்வாசிகளுக்கு அச்சுறுத்தலாக இருந்ததால் அதை சுட்டுக் கொல்ல முடிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
கரடி மூதாட்டி ஒருவரின் வீட்டிற்கு மிக நெருக்கமாக இருந்ததால், அதை அகற்றுவது பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று வெஸ்ட் யோர்ட்ஸ் பொலிஸ் தலைவர் ஹெல்கி ஜென்சன் தெரிவித்தார். அதனால் அதை சுட்டுக் கொல்ல முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் "இது நாங்கள் செய்ய விரும்பாத ஒன்று" என்று ஜென்சன் வருத்தம் தெரிவித்தார்.
துருவக் கரடிகள் ஐஸ்லாந்தில் பாதுகாக்கப்பட்ட இனங்கள் என்றாலும், மனித உயிருக்கு அச்சுறுத்தலாக இருந்தால் அதை சுட்டுக் கொல்ல ஐஸ்லாந்தின் சட்டம் அனுமதிக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |