பிறந்தநாள் கொண்டாடும் ஆண்ட்ரூ... சாண்ட்ரிங்ஹாம் மாளிகையில் 6 வாகனங்களில் வந்த பொலிசார்

Royal Family Epstein Files
By Arbin Feb 19, 2026 10:04 AM GMT
Report

முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ தங்கியிருக்கும் சாண்ட்ரிங்ஹாம் மாளிகையில் 6 வாகனங்களில் இன்று பொலிசார் சென்றுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

விசாரணை அதிகாரிகளா

முன்னாள் இளவரசரான ஆண்ட்ரூ இன்று தனது 66வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இந்த நிலையிலேயே காலை 8 மணிக்குப் பிறகு மன்னர் சார்லஸின் நோர்போக் எஸ்டேட்டிற்கு 6 வாகனங்களில் பொலிசார் சென்றுள்ளனர்.

பிறந்தநாள் கொண்டாடும் ஆண்ட்ரூ... சாண்ட்ரிங்ஹாம் மாளிகையில் 6 வாகனங்களில் வந்த பொலிசார் | Police Attend Sandringham Estate

ஆனால், இது விசாரணை அதிகாரிகளா என்பது தொடர்பில் தகவல் ஏதும் உறுதி செய்யப்படவில்லை. 8 பேர்கள் கொண்ட ஒரு குழு சாண்ட்ரிங்ஹாம் மாளிகையில் சென்றதாக அப்பகுதி மக்கள் உறுதி செய்துள்ளனர்.

அதில் ஒருவர், பொலிசாருக்கான மடிக்கணியுடன் காணப்பட்டுள்ளார். இன்று 66 வயதாகும் ஆண்ட்ரூ, எப்ஸ்டீன் விவகாரத்தில் சிக்கியதைத் தொடர்ந்து விண்ட்சரில் உள்ள மாளிகையில் இருந்து தனது மூத்த சகோதரரால் வெளியேற்றப்பட்ட பின்னர் சாண்ட்ரிங்ஹாமில் தங்கியுள்ளார்.

இந்தியாவில் பல பில்லியன் டொலர் முதலீடுகளைக் குவிக்கும் பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள்

இந்தியாவில் பல பில்லியன் டொலர் முதலீடுகளைக் குவிக்கும் பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள்

பிரித்தானியாவில் யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்று பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் கூறியுள்ள நிலையில், சாண்ட்ரிங்ஹாமில் பொலிசார் காணப்பட்டுள்ளனர்.

மட்டுமின்றி, மனித கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட எப்ஸ்டீன் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளைத் தொடங்கும் முன்னர் ஆய்வுகளை முன்னெடுக்க ஒன்பது பொலிஸ் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

பிறந்தநாள் கொண்டாடும் ஆண்ட்ரூ... சாண்ட்ரிங்ஹாம் மாளிகையில் 6 வாகனங்களில் வந்த பொலிசார் | Police Attend Sandringham Estate

எப்ஸ்டீன் விவகாரத்தில்

பாலியல் கடத்தல், அரசாங்க அதிகாரியாக தவறான நடத்தை மற்றும் பாலியல் கடத்தல் தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் அதிகாரிகள் மதிப்பாய்வு செய்து வருகின்றனர். ஆண்ட்ரூ இன்னும் அவர்களுடன் விசாரணை நிமித்தமான சந்திப்பை முன்னெடுக்கவில்லை.

ஆனால் அவரது சகோதரர் மன்னர் சார்லஸ், காவல்துறையினரின் விசாரணைகளுக்கு ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார்.

மறைந்த ராணியாரின் இரண்டாவது மகனான ஆண்ட்ரூ, பிரித்தானியாவின் வர்த்தக தூதராக இருந்தபோது, ​​எப்ஸ்டீனுக்கு முக்கியமான தகவல்களை கசியவிட்டிருக்கலாம் என்றே நம்பப்படுகிறது.

பிறந்தநாள் கொண்டாடும் ஆண்ட்ரூ... சாண்ட்ரிங்ஹாம் மாளிகையில் 6 வாகனங்களில் வந்த பொலிசார் | Police Attend Sandringham Estate

மட்டுமின்றி, எப்ஸ்டீனின் Lolita Express தனி விமானத்தில் பிரித்தானியாவிற்கு கடத்தப்பட்ட ஒரு பெண்ணை பக்கிங்ஹாம் அரண்மனைக்குள் அவர் அழைத்துச் சென்றிருக்கலாம் என்ற தகவலும் கசிந்துள்ளது.

சாண்ட்ரிங்ஹாம் மாளிகையில் காணப்பட்டுள்ள பொலிசார், கட்டாயம் எப்ஸ்டீன் விவகாரத்தில் விசாரணை முன்னெடுக்கவே என்பது உறுதி என்றே கூறுகின்றனர். பெருநகர பொலிசாரும் ஆண்ட்ரூ விவகாரத்தில் முதற்கட்ட விசாரணைகள் துவக்கப்பட்டுள்ளதாகவே தெரிவித்துள்ளனர்.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US