விமான நிலையத்தில் இளம்பெண்ணை சோதனையிட்ட பொலிசார்: எக்ஸ்ரேயில் தெரிந்த காட்சி
பிரேசிலிலிருந்து தென்னாப்பிரிக்கா வரும் விமானம் ஒன்றில் போதைப்பொருட்களுடன் பெண்ணொருவர் பயணிப்பதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
எக்ஸ்ரேயில் தெரிந்த காட்சி
பிரேசிலிலிருந்து தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க் விமான நிலையத்தில் வந்திறங்கிய அந்தப் பெண்ணை அதிகாரிகள் சோதனையிட்டார்கள்.

Image: SA Police Services
அவரை எக்ஸ்ரே சோதனைக்குட்படுத்தியபோது, அவரது வயிற்றுக்குள் சந்தேகத்துக்குரிய வகையில், பல கேப்ஸ்யூல்கள் இருப்பது தெரியவந்தது. உடனடியாக அவர் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அந்த கேப்ஸ்யூல்களில் 60ஐ அவர் வெளியேற்றியபோது, அவற்றிற்குள் கொக்கைன் என்னும் போதைப்பொருள் இருந்தது தெரியவந்துள்ளது.

Image: SA Police Services
அவர் அந்த கொக்கைன் உள்ள கேப்ஸ்யூல்களை விழுங்கி தென்னாப்பிரிக்காவுக்குக் கொண்டு வந்துள்ளார்.
அந்த கொக்கைனின் மதிப்பு இதுவரை தெரியவராத நிலையில், அவர் தொடர்ந்து அதிகாரிகளின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |