பொலிஸ் நாயை சுட்டுக் கொன்ற பிரித்தானிய அதிகாரிகள்: பின்னணியில் உள்ள காரணம்
பிரித்தானியாவில் பொலிஸ் நாய் ஒன்று தன்னுடைய கையாளுபவரை கடித்து பலத்த காயம் ஏற்படுத்திய பிறகு பொலிஸ் அதிகாரி ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது.
பொலிஸ் நாயை சுட்டுக் கொன்ற அதிகாரிகள்
பிரித்தானியாவின் வால்டன்-லே-டேல் பகுதியில் லங்காஷயர் பொலிஸ் குழு ஒன்று காணாமல் போன நபரை ஒருவரை தேடும் பணியில் ஈடுபட்டு இருந்தது.
அப்போது PD Jax என்ற பொலிஸ் நாய் வெறி பிடித்து தன்னுடைய கையாளுபவரை கடித்து பலத்த காயத்தை ஏற்படுத்தியது. உடனடியாக ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த ஆயுதம் ஏந்திய பொலிஸார் மற்றும் பிற அதிகாரிகள் நாயை அடக்க முயற்சி செய்தனர்.
Lancashire Police
இருப்பினும் நாய் கட்டுக்குள் வராமல் இருந்ததால் ஆயுதமேந்திய அதிகாரிகள் PD Jax என்ற பொலிஸ் நாயை சுட்டுக் கொன்றனர்.
பலத்த காயமடைந்த கையாளுபவர்
இதில் காவல்துறை நாய் கையாளுபவருக்கு மேல் கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது, அத்துடன் அவர் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை இருந்து வருகிறார். மேலும் இந்த சம்பவத்தில் பொதுமக்கள் தரப்பில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது அதிகாரிகளுக்கு அவ்வளவு எளிதான முடிவு இல்லை, ஆனால் வேறு யாருக்கும் இதனால் காயம் ஏற்படுவதற்கு முன்பு பொலிஸ் அதிகாரிகள் தங்களுடைய கடமையை செய்ய வேண்டும் என லங்காஷயர் காவல்துறையின் கண்காணிப்பாளர் ஹசன் கான் தெரிவித்துள்ளார்.
மேலும் காயமடைந்த அதிகாரிகளின் குடும்பத்தினருடன் தங்களுடைய எண்ணங்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |