பாரீஸ் அரசு அலுவலகம் முன் முகாமிட்டிருந்த புலம்பெயர்ந்தோரை அகற்றிய பொலிசார்
பிரான்ஸ் தலைநகர் பாரீஸிலுள்ள அரசு அலுவலகம் ஒன்றின் முன் கடந்த ஆறு நாட்களாக புலம்பெயர்ந்தோர் முகாமிட்டிருந்த நிலையில், செவ்வாயன்று பொலிசார் அவர்களை அங்கிருந்து அகற்றியுள்ளார்கள்.
அரசு அலுவலகம் முன் முகாம்
100 குழந்தைகள் உட்பட சுமார் 250 புலம்பெயர்ந்தோர், பாரீஸிலுள்ள முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள Paris city hall என்னும் கட்டிடத்துக்கு முன் கடந்த ஆறு நாட்களாக முகாமிட்டிருந்தார்கள்.
தங்களுக்கு நிலையான தங்குமிடம் வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் அங்கு முகாமிட்டிருந்தார்கள்.
இந்நிலையில், செவ்வாயன்று அங்கு வந்த பொலிசார் அவர்கள் அனைவரையும் அங்கிருந்து அகற்றியுள்ளார்கள்.
பொலிசார் தங்களை பேருந்துகளில் ஏற்றி நாட்டின் பல இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக இடங்களுக்கு அழைத்துச் செல்வதாக தெரிவிக்கும் புலம்பெயர்ந்தோரில் சிலர், தாங்கள் பாரீஸில் வேலை செய்வதாகவும், இப்போது தங்களை வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்வதால் எப்படி வேலைக்கு வருவது என்று புரியவில்லை என்றும் கூறுகிறார்கள்.
இது தங்கள் பிரச்சினைக்கு நிலையான தீர்வு இல்லை என சிலர் தெரிவிக்க, அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திகைப்பதாக பலரும் தெரிவித்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |