மனைவியை கொன்றுவிடுவதாக மிரட்டிய நபர்... காப்பாற்ற விரைந்த பொலிசார்: துயரத்தில் முடிந்த ஒரு சம்பவம்
அமெரிக்காவில் வீடு ஒன்றில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதாக தகவல் வந்ததைத் தொடர்ந்து பொலிசார் அங்கு விரைந்துள்ளனர். அப்போது, டெக்சாசிலிருந்த அந்த வீட்டிலிருந்த ஒருவர் தன் மனைவியை சுட்டுவிடுவதாக மிரட்டியுள்ளார். அப்போது காலை மணி 11.
பொலிசார் அந்த வீட்டை நெருங்க முயன்றபோது, அந்த வீட்டுக்குள்ளிருந்து ஒருவர் பொலிசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். அதில் இரண்டு பொலிசார் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த பொலிசார் ஒருவரை, மற்ற பொலிசார் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
சரணடைந்துவிடும்படி பொலிசார் தொடர்ந்து அந்த நபருக்கு அழைப்பு விடுத்துள்ளனர். நீண்ட நேரமாக வீட்டுக்குள்ளிருந்து எந்த பதிலும் வராமல் போகவே, மதியம் 1.27க்கு பொலிசார் அதிரடியாக வீட்டுக்குள் நுழைந்துள்ளனர்.
அப்போது, வீட்டுக்குள் ஒரு பெண்ணும் ஒரு ஆணும் துப்பாக்கிக் காயங்களுடன் இறந்துகிடப்பது தெரியவந்துள்ளது. அந்த நபர்தான் பொலிசாரை சுட்டவர் என கருதப்படுகிறது. பொலிசார் உயிரிழந்தவர்களின் அடையாளங்களை வெளியிடவில்லை.




