ஹெல்மெட் அணியாததால் ஃபைன் போட்ட பொலிஸ்! ஆத்திரத்தில் பவர்கட் பண்ண லைன்மேன்
இந்திய மாநிலம், ஆந்திர பிரதேசத்தில் தலைக்கவசம் அணியாமல் சென்றதற்காக அபராதம் விதித்த பொலிஸை பழிவாங்க, மின் இணைப்பை துண்டித்த லைன்மேனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அபராதம் விதித்த பொலிஸ்
ஆந்திர மாநிலம், மன்யம் மாவட்ட தலைநகர் பார்வதிபுரத்தை சேர்ந்த காவல் ஆய்வாளர் பாப்பையா. இவர் பார்வதிபுரத்தில் உள்ள ஆர்.டி.சி சர்க்கிள் பகுதியில் தனது பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
Representative image
அப்போது, அவ்வழியாக மின்வாரிய ஊழியர் உமா என்பவர் தலைக்கவசம் இல்லாமல் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, போக்குவரத்து விதியை மீறியதால் காவல் ஆய்வாளரான பாப்பையா மின்வாரிய ஊழியருக்கு ரூ.135 அபராதம் விதித்தார்.
மின் இணைப்பை துண்டித்த ஊழியர்
இதனால், ஆவேசமடைந்த மின்வாரிய ஊழியரான உமா பார்வதிபுரத்தில் உள்ள பொலிஸ் உதவி மையத்திற்கு சென்று நான் யார் தெரியுமா, எனக்கு அபராதம் போடுறீங்களா என்று சத்தமாக பேசியுள்ளார்.
பின்பு, பொலிஸ் உதவி மையத்தின் அருகில் இருந்த மின்கம்பத்தில் ஏறி மின் இணைப்பை துண்டித்துள்ளார்.
உடனே, தகவலறிந்த பொலிசார் மற்றும் மின்வாரியத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மின் இணைப்பை சரிசெய்தனர். மேலும், இது தொடர்பாக உமாவிடம் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |