சுவிஸ் மாகாணமொன்றில் அநாதரவாக விடப்பட்டிருந்த மலைப்பாம்பு உயிரிழப்பு: மர்மம் விலகியது
சுவிஸ் மாகாணமொன்றில் அநாதரவாக விடப்பட்ட மலைப்பாம்பொன்று உயிரிழந்து கிடந்த விடயம் குழப்பத்தை உருவாக்கியிருந்த நிலையில், அதன் உரிமையாளர் தான் அந்தப் பாம்பை சாகவிட்டதை ஒப்புக்கொண்டுள்ளார்.
மர்மம் விலகியது
சுவிட்சர்லாந்தின் Aargau மாகாணத்திலுள்ள Rheinfelden என்னுமிடத்தில், மலைப்பாம்பொன்று உயிரிழந்துகிடந்ததைக் கண்ட வழிப்போக்கர் ஒருவர் பொலிசாருக்கு தகவலளித்துள்ளார்.
மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் காணப்படும் king python என்னும் வகை மலைப்பாம்பு எப்படி சுவிட்சர்லாந்துக்கு வந்தது, என்ன நடந்தது என்று புரியாமல் பொலிசார் குழப்பமடைந்தனர்.
இந்நிலையில், அந்த பாம்பை தான் வளர்த்துவந்ததாக பொலிசாரிடம் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார் ஒருவர்.
தான் தனது வீட்டை இழக்க நேர்ந்ததாகவும், பொருளாதார பிரச்சினைகள் ஏற்பட்டதாலும், அந்த பாம்பை தான் கைவிட்டுவிட்டதாக அவர் பொலிசாரிடம் கூறியுள்ளார்.
மலைப்பாம்பைக் குறித்த மர்மம் விலகிய நிலையில், விலங்கு ஒன்றைத் துன்புறுத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |