வங்கிக்கு பணம் கொண்டுவந்த வேன்: ஜேர்மனியில் பரபரப்பை உருவாக்கிய கொள்ளைச் சம்பவம்
ஜேர்மனியில், வங்கி ஒன்றிற்கு பணம் கொண்டுவந்த வேனின் சாரதியை பிணைக்கைதியாக பிடித்துவைத்துக்கொண்டார் ஒருவர்.
வங்கிக்கு பணம் கொண்டுவந்த வேன்
நேற்று வெள்ளிகிழமை காலை, ஜேர்மனியின் Rhineland-Palatinate மாகாணத்திலுள்ள Sinzig நகரில் அமைந்துள்ள வங்கி ஒன்றிற்கு பணம் கொண்டுவந்துள்ளது வேன் ஒன்று.

வேனின் சாரதி வேனிலிருந்து இறங்கிய அடுத்த கணம், தேனீ வளர்ப்பவர்களைப் போன்று உடல் முழுவதும் மறைக்கும் வகையில் உடை அணிந்திருந்த ஒருவர், அந்த சாரதியை மடக்கிப் பிடித்துள்ளார்.
வேனிலிருந்து பணம் இருந்த பை ஒன்றை எடுத்துக்கொண்ட அந்த நபர், அந்த சாரதியையும், வங்கி ஊழியர் ஒருவரையும் பிணைக்கைதிகளாக பிடித்து ஒரு அறைக்குள் அடைத்துவைத்துள்ளார்.
தகவலறிந்து வங்கியை சுற்றி வளைத்த பொலிசார், வங்கிக்குள் அதிரடியாக நுழைந்து பிணைக்கைதிகள் இருவரையும் மீட்டுள்ளனர்.
விடயம் என்னவென்றால், அவர்களை பிணைக்கைதிகளாக பிடித்துவைத்திருந்த நபர் வங்கிக்குள் இல்லை.
அவர் எப்போதோ எஸ்கேப் ஆகிவிட்டார். அவர் பணத்தைத் திருடிச் சென்றாரா, எவ்வளவு பணத்தைத் திருடிச் சென்றார் என்பது போன்ற தகவல்கள் வெளியாகவில்லை.
பொலிசார் வங்கியை சுற்றி வளைத்திருக்க, ஹெலிகொப்டர்கள் வானில் வட்டமடித்துக்கொண்டிருக்க, அவர் எப்படி தப்பினார் என்பது மர்மமாகவே நீடிக்கிறது. பொலிசார் அந்த நபரைத் தேடிவருகிறார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |