சுவிஸ் கோர சம்பவம்... மேலும் 16 பேர்களை அடையாளம் கண்டுள்ள காவல்துறை
சுவிட்சர்லாந்தின் கிரான்ஸ்-மொன்டானா நகரில் உள்ள மதுபான விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியான மேலும் 16 பேரின் உடல்களைக் காவல்துறை அடையாளம் கண்டுள்ளது.
எண்ணிக்கை 24
அவர்களில் மிக இளையவர் 14 வயதுடைய ஒரு சுவிஸ் சிறுமி என்றே தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவர்களில் ஒன்பது பேர் 18 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் கூறப்படுகிறது.

அடையாளம் காணப்பட்டவர்களில் சுவிஸ், இத்தாலி, ருமேனிய, துருக்கி மற்றும் பிரெஞ்சு நாட்டவர்கள் அடங்கியுள்ளனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்தத் தீவிபத்தின் விளைவாக மரணமடைந்தவர்களாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது என்று அதிகாரிகள் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
சனிக்கிழமையன்று எட்டு சுவிஸ் குடிமக்கள் அடையாளம் காணப்பட்டனர். இந்த நிலையில், Le Constellation மதுபான விடுதியை நடத்தியவர்கள் மீது குற்றவியல் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே, காணாமல் போனவர்களாகக் கருதப்படும் தங்களுக்குப் பிரியமானவர்களைப் பற்றிய தகவல்களுக்காக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் வேதனையான சூழலில் காத்திருக்கின்றனர்.

பதின்ம வயதுடையவர்கள்
பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு மரியாதை அளிக்கும் விதமாக, அடையாளம் காணப்பட்ட மரணமடைந்தவர்களைப் பற்றிய மேலதிக விவரங்கள் எதுவும் வெளியிடப்படாது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அந்த மதுபான விடுதியில் ஏற்பட்ட தீ விபத்திற்குக் காரணம், கூரைக்கு மிக அருகில் கொண்டு செல்லப்பட்ட போத்தல்களில் இருந்த மத்தாப்புகளே என்று ஒரு ஆரம்பகட்ட விசாரணை கண்டறிந்துள்ளது.
நாட்டை உலுக்கிய அந்தத் தீ விபத்தில் குறைந்தது 40 பேர் மரணமடைந்தனர் மற்றும் 119 பேர் காயங்கலுடன் தப்பியுள்ளனர். இறந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்களில் பலர் பதின்ம வயதுடையவர்கள் என்றே தகவல் வெளியாகியுள்ளது.

சனிக்கிழமையன்று அடையாளம் காணப்பட்டு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட எட்டு பேரும் 16 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள் என்று சுவிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |