இலங்கையில் சாலையில் கவிழ்ந்த பொலிஸார் வாகனம்: பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
இலங்கை மாங்குளம் பகுதியில் பொலிஸாரின் வாகனம் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
கவிழ்ந்த பொலிஸார் வாகனம்
முல்லைத்தீவு- மாங்குளம் வீதியில் மணவாளன் பட்டமுறிப்புக்கு அருகிலுள்ள பகுதியில் பொலிஸாரின் வாகனம் ஒன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
சாலையின் குறுக்கே மாடுகள் வந்ததை அடுத்து பொலிஸார் வாகனம் சாலை விட்டு விலகிச் சென்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பொலிஸ் வாகனத்தில் பயணித்த பொலிஸார் சிறு காயங்களுடன் தப்பினர், ஆனால் பொலிஸ் ஜீப் கடுமையாக சேதமடைந்துள்ளது.
பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

முல்லைத்தீவு மாவட்டத்தில் காலபோக நெற்செய்கை இடம்பெற்றுள்ளதால் சாலைகளில் கால்நடைகளின் நடமாட்டம் தற்போது அதிகரித்து காணப்படுகின்றது.
இதனால் கால்நடைகளால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் காணப்படுவதுடன் சாரதிகள் மிகவும் கவனமாக வாகனங்களை செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகின்றது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |