இந்திய இளம்பெண் மீது கார் மோதிக்கொன்றுவிட்டு சிரிக்கும் பொலிசார்: அமெரிக்காவில் உருவாகியுள்ள சர்ச்சை
அமெரிக்காவில், சாலையைக் கடக்கும்போது பொலிஸ் கார் ஒன்று மோதியதில் தூக்கி வீசப்பட்ட இந்திய மாணவி ஒருவர் உயிரிழந்தார்.
அந்த இளம்பெண் மீது மோதிய காரில் இருந்த பொலிசார், அந்த இளம்பெண் குறித்து மோசமாக விமர்சித்து சிரிக்கும் வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண்
இந்தியாவின் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜானவி (Jaahnavi Kandula, 23). அமெரிக்காவில் கல்வி பயின்று வரும் ஜானவி, Seattle நகரில் சாலை ஒன்றைக் கடந்துகொண்டிருக்கும்போது, வேகமாக வந்த பொலிஸ் கார் ஒன்று அவர் மீது மோதியுள்ளது.
மணிக்கு 119 கிலோமீற்றர் வேகத்தில் வந்த அந்த கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட அந்த இளம்பெண் பரிதாபமாக பலியாகியுள்ளார்.
உருவாகியுள்ள சர்ச்சை
இந்நிலையில், அந்தக் காரிலிருந்த பொலிசார், அந்த இளம்பெண்ணைக் கொன்றுவிட்டு, அதைக் குறித்து சற்றும் வருத்தப்படாமல், அவரை கேலி செய்து சிரிக்கும் காட்சி ஒன்று வெளியாகி சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
காரை ஓட்டியவர் Kevin Dave என்னும் பொலிசார். அவர் ஜானவி மீது காரை மோதியதைக் குறித்து, அவருடன் அதே காரில் பயணித்த பொலிஸ் யூனியனைச் சேர்ந்தவரான Daniel Auderer என்பவர் தனது மேலதிகாரிக்கு தகவல் கொடுத்துள்ளார். அப்போது தனது சட்டையிலிருந்த கமெராவை அணைக்க மறந்துவிட்டிருக்கிறார்.
அப்போது, அவள் ஒன்றும் 40 அடி தூரமெல்லாம் தூக்கி வீசப்பட்டது போலத் தெரியவில்லை, ஆனாலும், அவள் செத்துவிட்டாள் என்று கூறுகிறார். சொல்லிவிட்டு, அவர் சிரிப்பதை வெளியாகியுள்ள வீடியோவில் கேட்கலாம்.
அதைத் தொடர்ந்து, அவள் ஒரு சாதாரண நபர்தான், ஒரு காசோலை எழுதிக்கொடுத்தால் போதும் என்று கூறும் Auderer, 11,000 டொலர்களா, அவளுக்கு 26 வயதாகிறது, அந்த அளவுக்கெல்லாம் மதிப்பில்லை என்று கூறிச் சிரிக்கிறார்.
இந்த சம்பவம் குறித்து காரில் பயணித்த வேறொரு பொலிசார் புகாரளித்ததைத் தொடர்ந்து விடயம் வெளியே வர, ஊடகங்கள் கடும் விமர்சனங்களை முன்வைக்க, அதிகாரிகள் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.
வீடியோ குறித்துக் கேள்விப்பட்ட ஜானவியின் மாமாவான அஷோக் (Ashok Mandula), இதைக் குறித்து எங்கள் கூட்ம்பத்தினர் ஒன்றும் சொல்வதற்கில்லை, இந்த பொலிசாரின் மகள்கள், பேத்திகளுக்கு ஏதாவது மதிப்பு இருக்குமா என்றுதான் எண்ணத்தோன்றுகிறது, யாராக இருந்தாலும் ஒரு உயிர் உயிர்தானே என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |