பொலிஸ் அதிகாரியை சுட்டுக்கொன்ற பிரித்தானிய கோடீஸ்வரரின் மருமகள்... யார் இந்த கனேடிய பெண்?
பொலிஸ் அதிகாரி ஒருவரை சுட்டுக்கொன்ற வழக்கில் சிக்கியுள்ள கனேடிய பெண் குறித்த கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரித்தானிய கோடீஸ்வரரான Lord Michael Ashcroft என்பவரின் மகன் Andrew Ashcroft. அவரது மனைவிதான் தற்போது சிக்கலில் சிக்கியிருக்கும் Jasmine Hartin (32). தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள்.
Andrew 20 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய அமெரிக்க நாடான Belizeஇல் ஆடம்பர ஹொட்டல் தொழில் நடத்தி வருகிறார். பெரும் செல்வந்தர்களாக இருந்தும், கனேடிய குடியுரிமை கொண்டவரான Jasmine Hartin, செல்வந்தர்களுடன் இருப்பதை விரும்பாமல், நடுத்தர மக்களுடன் இருப்பதையே விரும்புவாராம். அவர்களுடன் இருக்கும்போதுதான், நான் நானாக உணர்கிறேன் என்பாராம் அவர்.
அதுவும், நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பொலிசாருடன் அதிக நட்பு வைத்துள்ளாராம் அவர், அது ஒரு பாதுகாப்பான உணர்வை ஏற்படுத்துவதால் Jasmine அவர்களுடன் நட்பு வைத்திருப்பதை விரும்பியிருக்கலாம் என்கிறார் மதுபான விடுதி ஒன்றின் உரிமையாளரான Gene Lopez. Gene வைத்திருக்கும் மதுபான விடுதி ஒன்றும் செல்வந்தர்களுக்கான ஐந்து நட்சத்திர விடுதி அல்ல, ஆனால், அங்கு வருவதை விரும்புவாராம் Jasmine.
சில நேரங்களில், இரவு வரும் Jasmine, காலை 6 மணி வரை கூட அங்கேயே இருப்பாராம். கொஞ்சமாக மதுபானம் அருந்திவிட்டு நண்பர்களுடன் ஜாலியாக நடனம் ஆடி விட்டு, ஓய்வு எடுத்துவிட்டுச் செலாவாராம் Jasmine.
அவர் ஒரு முறை கூட போதைப்பொருள் அருந்தியதையோ, அதிக அளவு மதுபானம் அருந்தியதையோ தான் பார்த்ததில்லை என்று கூறும் Gene, நட்பாக எளிமையாக பழகுவதால் மதுபானம் வழங்குவோர் Jasmineஐ ஏமாற்றுவதும் உண்டு என்கிறார்.
உங்களுக்கான பில் 200 டொலர்கள் என்று அவர்கள் கூறினால், அது பொய் என்று தெரிந்தாலும், அவர்கள் என்ஜாய் பண்ணட்டும் என்று சொல்லி கண்டுகொள்ளாமல் அவர்கள் கேட்ட பணத்தைக் கொடுத்துவிடுவாராம் Jasmine. அப்படித்தான் நடுத்தர வர்க்க மக்கள் மனதில் இடம்பிடித்த Jasmine, நண்பராகிவிட்ட Henry Jemmott என்னும் பொலிஸ் அதிகாரி ஒருவருடன் அமர்ந்து மதுபானம் அருந்தும்போது என்ன நடந்ததோ தெரியாது, துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டிருக்கிறது.
Gene, ஒரு மதுபான விடுதி உரிமையாளர் மட்டுமல்ல, பாதுகாப்பு நிறுவனம் நடத்துபவரும்கூட. ஆகவே, தகவல் அறிந்து Gene சம்பவ இடத்துக்குச் செல்லும்போது, படகுத்துறையில் இரத்தம் தோய்ந்த உடையுடன் அமர்ந்திருந்திருக்கிறார் Jasmine.
Jasmine,என்ன நடந்தது என்று Gene அவரிடம் கேட்க, அவர் பதில் ஒன்றும் சொல்லவில்லையாம். மாறாக, யாரிடமாவது சிகரெட் இருக்குமா? என்று கேட்டாராம் அவர்.
Jasmine ஒரு நல்ல பெண், ஆனால், அவர் தவறான நேரத்தில், தவறான இடத்தில் இருந்திருக்கிறார் என்று நினைக்கிறேன், அவர் சம்பவம் நடந்த இடத்திலிருந்து தப்பியோடக்கூட முயற்சி செய்யவில்லை என்கிறார் Gene. Jasmine கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு என்ன தண்டனை வழங்கப்படும் என்பது இதுவரை உறுதியாகவில்லை.