ஜாகிங் சென்ற நபர் கண்ணில் பட்ட தலையில்லாத உடல்: நியூயார்க்கில் ஒரு பரபரப்பு சம்பவம்
நியூயார்க்கில் ஜாகிங் சென்ற ஒருவர் கண்ணில், கடலிலிருந்து கரையொதுங்கிய தலையில்லாத உடல் ஒன்று சிக்கியுள்ளது. ப்ரூக்ளின் பகுதியில் கரையொதுங்கிய அந்த உடலைக் கண்ட அந்த நபர், உடனடியாக பொலிசாருக்கு தகவலளித்துள்ளார்.
உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார், அந்த உடலை மீட்டபோது அதிர்ச்சியளிக்கும் வகையில் அந்த உடலில் தலை, கைகள் மற்றும் ஒரு காலும் இல்லை என்பது தெரியவந்தது.
அந்த உடலில் மீதமுள்ள பாகங்கள் கிடைக்குமா என பொலிசார் தேடியநிலையில், வேறு எந்த பாகமும் கிடைக்கவில்லை.
அந்த உடல் அழுகத்தொடங்கிவிட்டதால், அது அதிக நேரம் தண்ணீரில் கிடந்திருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள்.
அத்துடன், அந்த நபர் கைகால்கள் வெட்டப்பட்டபின் தண்ணீரில் வீசப்பட்டாரா அல்லது வெகு நேரம் தண்ணீரில் கிடந்ததால் அவை உடலிலிருந்து பிரிந்துவிட்டனவா என்பது தெரியவில்லை.
அந்த உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்ட நிலையில், பொலிசார் இறந்த அந்த நபரை அடையாளம் காணும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள்.
