இங்கிலாந்தில் அதிகாலையில் கார் ஒன்றை நிறுத்தி சோதனையிட்ட பொலிசார்: கண்ட அதிரவைக்கும் காட்சி
மேற்கு லண்டனைச் சேர்ந்த ஒருவரது காரை சோதனையிட்ட பொலிசார், அவரது காரில் ஒரு பெட்டி நிறைய போதைப்பொருட்கள் இருந்ததைக் கண்டுபிடித்தனர்.
பொலிசார் கண்காணிப்பதை அறியாத நபர் செய்த செயல்
Hounslow என்ற இடத்தைச் சேர்ந்தவரான ஆல்பர்ட் (Albert Saidu Hines, 58) என்பவர், சேமிப்பகம் ஒன்றிலிருந்து ஒரு பெரிய பெட்டியை தூக்க முடியாமல் தூக்கி வருவதைக் கவனித்த பொலிசார், அவருக்குத் தெரியாமல் அவரை பின்தொடர்ந்துள்ளனர்.
மறுநாள், நள்ளிரவு 1.35 மணியளவில் ஆல்பர்ட், கிளிண்டன் (Anthony Clinton, 60) என்பவரை சந்தித்துள்ளார். அவரிடம் ஆல்பர்ட் ஒரு பெட்டியைக் கொடுப்பதைக் கவனித்த பொலிசார், அவரைப் பின்தொடர்ந்துள்ளனர். அதிகாலை 4.34 மணிக்கு அவரது காரை நிறுத்தி சோதனையிட்ட பொலிசார், அவரது காரில் 21 பொட்டலங்களில் போதைப்பொருள் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.
Image: Metropolitan Police
கையும் களவுமாக பிடித்த பொலிசார்
ஒரு வாரத்துக்குப் பிறகு, ஆல்பர்ட் தன் காருக்கருகில் இருக்கும்போது, அவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர். அவரது காரை சோதனையிடும்போது, அவர் வெவ்வேறு வகையான போதைப்பொருட்களை தன் காரில் வைத்திருப்பது தெரியவந்தது.
இம்மாதம் 5ஆம் திகதி கிளிண்டனுக்கு ஐந்து ஆண்டுகள், ஏழு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த வாரம், அதாவது 12ஆம் திகதி, வெள்ளிக்கிழமை, ஆல்பர்ட்டுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
Image: Metropolitan Police