பணியில் இருக்கும்போதே சரிந்து விழுந்த காவலர்! மருத்துவமனையில் மரணம்..விசாரணையில் வெளியான அதிர்ச்சி உண்மை
அமெரிக்காவில் காவலர் ஒருவர் வலி நிவாரணி மருந்தை அதிகளவில் உட்கொண்டதில் உயிரிழந்தார்.
பொலிஸ் சார்ஜெண்ட்
அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் பொலிஸ் சார்ஜெண்ட் ஆக பணியாற்றி வந்தவர் ரிச்சர்ட் கேலி (54).
இவர் தனது அலுவலகத்தில் பணியில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்ததால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது பிரேத பரிசோதனை முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன.
அதில் கெல்லி Fentanyl மற்றும் methamphetamine ஆகியவற்றை உட்கொண்டதால் உயிரிழந்ததாக தெரிய வந்தது.
சக்திவாய்ந்த மயக்க மருந்து
இதன்மூலம் அவர் போதைப்பொருள் துஷ்பிரயோகம் செய்துள்ளார் என உயரதிகாரி ஃபோர்ட் தெரிவித்தார். மேலும், அவரது கருத்துக்கள் மற்றும் காவல்துறை கண்டுபிடித்ததன் மூலம், கெல்லி மரணத்திற்கு முன்பு போதைப் பழக்கத்தினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்பதைக் குறிக்கிறது.
Fentanyl என்பது ஒரு சக்திவாய்ந்த நரம்புவழி மயக்க மருந்தாக அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டதாகும். பின்னர் தோல் இணைப்பு மற்றும் வலி நிவாரணத்திற்கான கலவையாக இது உருவாக்கப்பட்டது. அதேபோல் Methamphetamine என்பது சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் மருந்து பொருளாகும்.
@ABC11
இவற்றில் Fentanylஐ அதிகளவில் எடுத்துக் கொள்வது கோகையின், ஹெராயின் போன்ற கடினமான போதைப்பொருட்களை எடுத்துக் கொள்வதற்கு சமம் ஆகும்.
கடந்த ஆண்டில், குற்றம் நடந்த இடத்தில் Fentanyl-ஐ கையாள்வதால் பல காவலர்கள் அபாயகரமான, அளவுக்கதிகமான அளவுகளை அனுபவித்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால், இந்த மருந்துடன் தோல் தொடர்பு மட்டும் உடனடியாக அதிகப்படியான அளவை ஏற்படுத்தாது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |