விமானத்தை அவசரமாக தரையிறக்க வைத்து தப்பிய 20 பயணிகள்: திடுக்கிட வைக்கும் சம்பவம்
மஜோர்காவின் பால்மா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட பயணிகள் விமானத்தில் இருந்து 20 பயணிகள் திடீரென்று தப்பிச் சென்ற சம்பவம் அதிர்வகைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் குறித்த விமான நிலையமானது பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பில் மூடப்பட்டது. மொராக்கோவில் உள்ள காசாபிளாங்காவிலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் வரை சென்ற பயணிகள் விமானமே அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
34 வயதான மொராக்கோ நாட்டவர் ஒருவர் திடீரென்று நோய்வாய்ப்பட, அந்த விமானமானது அவசர அவசரமாக மஜோர்காவுக்கு திருப்பி விடப்பட்டது.
வெள்ளிக்கிழமை இரவு நடந்த இச்சம்பவத்தில் நோய்வாய்ப்பட்டதாக கூறி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றவர்கள் மாயமானதாக தெரிய வந்தது. மேலும், இவர்களுடன் சுமார் 20 பயணிகள் விமானத்தில் இருந்து வெளியேறியவர்களும் மாயமாகியுள்ளனர்.
திடீரென்று மாயமான பயணிகள் தொடர்பில் பொலிசார் தேடுதல் நடவடிக்கை முன்னெடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவத்தின் போது அதே விமானத்தில் பயணித்த லண்டன் வாழ் பெண் ஒருவர், நடந்த விவகாரங்கள் உறுதி செய்துள்ளதுடன், பாதுகாப்பு அச்சுறுத்தல் பேரில் விமான நிலையம் 2 மணி நேரம் மூடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதும் எதிர்கொண்ட மருத்துவ ஊழியர்களை முந்திக்கொண்டு 20 பேர் வெளியேறியதாகவும், அவர்கள் எங்கே சென்றார்கள் என்பது தொடர்பில் தகவல் இல்லை எனவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.