பிரித்தானியாவில் 14 வயது சிறுமியை காணவில்லை: பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை
பிரித்தானியாவில் 14 வயது சிறுமி காணாமல் போனதை அடுத்து காவல்துறை தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தியுள்ளது.
காணாமல் போன சிறுமி
பிரித்தானியாவில் 14 வயது சிறுமி தலாய்லா பிரான்சிஸ்(Talailah Francis) காணாமல் போனதை அடுத்து அவரை கண்டுபிடிப்பதற்கு பொதுமக்கள் உதவி செய்ய வேண்டும் என்று பொலிஸ் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு தலாய்லா பிரான்சிஸ் காணாமல் போன நிலையில், ஜனவரி 25 ஆம் திகதி சனிக்கிழமை கேம்பிரிட்ஜில் உள்ள விட்டில்ஸ்ஃபோர்ட்(Whittlesford) சேவை நிலையத்தில் கடைசியாக தலாய்லா பார்க்கப்பட்டுள்ளார்.
புலனாய்வு அதிகாரிகள் அவள் லண்டனுக்கு சென்று இருக்கலாம் என்று நம்புகின்றனர்.
லண்டனில் சிறுமி
லண்டனின் பல பகுதிகளில் தலாய்லாவைக் கண்டதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக பெருநகர காவல்துறை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
Hackney, Lambeth, Enfield, மற்றும் Southwark உட்பட பல லண்டன் பெருநகரங்களில் அவளைப் பார்த்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
தலாய்லாவின் நலன் குறித்து காவல்துறை ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக முன்வருமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக என்று பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காவல் துறையால் வெளியிடப்பட்ட சிசிடிவி படத்தில், தலாய்லா லண்டனில் உள்ள ஒரு ஆயிஸ்டர் அட்டை வாசகருக்கு அருகில் இருப்பது போல் தெரிகிறது.
யாராவது அவளைப் பார்த்தால் உடனடியாக 999 என்ற எண்ணிற்கு அழைக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |