தமிழக அரசியலில் புதிய திருப்பம்! கமல்ஹாசனுடன் சரத்குமார் சந்திப்பு: உதயமாகிறதா 3வது அணி?
தமிழக அரசியலில் புதிய திருப்பமாக அதிமுக கூட்டணியிலிருந்து விலகிய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மற்றும் திமுக கூட்டணியிலிருந்து விலகிய ஐஜேக கட்சியின் துணை பொதுச்செயலாளர் ரவி பாபு ஆகியோர், மக்கன் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை நேரில் சந்தித்துள்ளனர்.
ஆழ்வார்பேட்டையில் உள்ள மநீம அலுவலகத்தில் கமல்ஹாசனுடன் சரத்குமார்-ரவி பாபு ஆகியோர் சந்திப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய சமத்துவ மக்கள் கட்சியும், திமுக கூட்டணியில் இருந்து விலகிய இந்திய ஜனநாயக கட்சியும் இணைந்து கூட்டணி அமைத்துள்ள நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
இதன் மூலம் மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் சமக-ஐஜேகே இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
பிப்ரவரி 24ம் திகதி ஜெயலலிதா பிறந்த நாளான்று தி.நகரில் இல்லத்திற்கு சென்ற சரத்குமார் சசிகலாவை நேரில் சந்தித்தார் என்பது நினைவுக் கூரத்தக்கது.
#KamalHaasan #Sarathkumar #RaajkamalProductions pic.twitter.com/20PC0mViVK
— Diamond Babu (@idiamondbabu) February 27, 2021
ஆனால் சந்திப்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார், சசிகலாவின் உடல்நலம் குறித்து விசாரித்ததாக கூறினார்.