புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சியைச் சேர்ந்த ஒருவராவது வெற்றி பெறுவார்: மக்கள் கருத்து
ஜேர்மனியில் புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சிக்கு ஆதரவு அதிகரித்துவரும் நிலையில், மூன்று மாகாணங்களில் நடைபெற உள்ள தேர்தல்களில் ஒன்றிலாவது அக்கட்சிக்கு வெற்றி கிடைக்கும் என மக்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
மக்கள் கருத்து
விரைவில் ஜேர்மனியின் மூன்று மாகாணங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில், பிரபல ஜேர்மன் ஊடகம் ஒன்று மேற்கொண்ட ஆய்வொன்றில், நடைபெற இருக்கும் மூன்று மாகாணத் தேர்தல்களில், ஒரு மாகாணத்திலாவது தீவிர புலம்பெயர்தல் எதிர்ப்பு வலதுசாரிக் கட்சியான AfD கட்சி வெற்றிபெறும் என 69 சதவிகித ஜேர்மன் மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
இவர்களில் 28 சதவிகிதம் பேர், ஒன்று அல்ல, பல மாகாணங்களில் AfD கட்சி வெற்றிபெறும் என தெரிவித்துள்ளார்கள்.
விடயம் என்னவென்றால், அப்படி AfD கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால், அக்கட்சி CDU கட்சி மற்றும் ஒரு இடதுசாரிக் கட்சியுடன் இணைந்தாவது ஆட்சி அமைக்கவேண்டும் என ஆய்வில் பங்கேற்ற 40 சதவிகிதத்தினர் தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |