பொள்ளாச்சி வன்கொடுமை வழக்கு - 9 பேருக்கும் ஆயுள் தண்டனை
பொள்ளாச்சி வன்கொடுமை வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது.
பொள்ளாச்சி வன்கொடுமை வழக்கு
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்கள் கூட்டு வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியானது.
இந்த விவகாரத்தில் 'அண்ணா அடிக்காதீங்க' என பாதிக்கப்பட்ட பெண்களின் அலறல் சத்தம் அடங்கிய வீடியோ வெளியாகி தமிழ்நாட்டையே அதிர வைத்தது.
இளம்பெண் ஒருவர் அளித்த புகாரின் மூலம், இந்த விவாகரம் வெளிச்சத்திற்கு வந்தது. அன்றைய அதிமுக அரசு, இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைத்தது.
சிபிஐ விசாரணையில், சபரிராஜன்(32), திருநாவுக்கரசு(34), சதீஷ்(32), வசந்தகுமார்(30), மணிவண்ணன்(32), பாபு(33), ஹெரன் பால்(32), அருளானந்தம்(38), மற்றும் அருண்குமார்(320, ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 2019 ஆம் ஆண்டு மே 21ல் கோவை மகளிர் நீதிமன்றத்தில், சி.பி.ஐ அதிகாரிகள் இவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இதற்கான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், நீதிபதி நந்தினிதேவி இன்று இவர்கள் 9 பேரையும் குற்றவாளிகள் தீர்ப்பு வழங்கியுள்ளார்.
இதில், 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.85 லட்சம் நீதிமன்றம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |