பொல்லார்டு, பூரனை Wildcard வீரர்களாக சேர்த்த முன்னாள் சாம்பியன் அணி
MI எமிரேட்ஸ் அணி சர்வதேச லீக் டி20 தொடரின் நான்காவது சீசனுக்காக, கீரோன் பொல்லார்டு மற்றும் நிக்கோலஸ் பூரன் ஆகியோரை Wildcard வீரர்களாக சேர்த்துள்ளதாக அறிவித்துள்ளது.
MI எமிரேட்ஸ்
மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் வீரரான கீரோன் பொல்லார்டு (Kieron Pollard) லீக் போட்டிகளில் விளையாடி வருகிறார். 
மும்பை இந்தியன்ஸின் ஜாம்பவானான பொல்லார்டு, 2024ஆம் ஆண்டு MI எமிரேட்ஸ் அணிக்காக கிண்ணத்தை வென்று கொடுத்தார்.
அதே அணியில் நிக்கோலஸ் பூரனும் (Nicholas Pooran) அபாரமாக ஆடி, கிண்ணத்தை வென்றதற்கு மற்றொரு முக்கிய காரணமாக அமைந்தார்.
இந்த நிலையில், சர்வதேச லீக் டி20 தொடரின் நான்காவது சீசனுக்காக கீரோன் பொல்லார்டு மற்றும் நிக்கோலஸ் பூரனை Wildcard வீரர்களாக சேர்த்துள்ளதாக MI எமிரேட்ஸ் அணி அறிவித்துள்ளது. 
பொல்லார்டு, பூரன்
இதனைத் தொடர்ந்து, டிசம்பர் 4ஆம் திகதி கல்ஃப் ஜெயெண்ட்ஸ் அணிக்கு எதிரான ILT20 போட்டியில் பொல்லார்டு, பூரன் விளையாடுவார்கள்.
பொல்லார்டு 101 சர்வதேச டி20 போட்டிகளில் 1569 ஓட்டங்களும், 189 ஐபிஎல் போட்டிகளில் 3412 ஓட்டங்களும் எடுத்துள்ளார். அத்துடன் சர்வதேச டி20யில் 42 விக்கெட்டுகளையும், ஐபிஎல் கிரிக்கெட்டில் 69 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
நிக்கோலஸ் பூரன் 106 சர்வதேச டி20 போட்டிகளில் 2275 ஓட்டங்களும், 90 ஐபிஎல் போட்டிகளில் 2293 ஓட்டங்களும் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |