T20 கிரிக்கெட்டில் புதிய சாதனை - கெயிலை தொடர்ந்து 2ஆம் இடம்பிடித்த பொல்லார்ட்
மேற்கு இந்திய தீவுகளில், கரீபியன் ப்ரீமியர் லீக்(CPL) T20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.
நேற்று நடைபெற்ற பார்படாஸ் ராயல்ஸ்(BR) மற்றும் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ்(TKR) அணிகளுக்கு இடையேயான போட்டியில், பொல்லார்ட் புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.
பொல்லார்ட்
இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதலில் துடுப்பாட்டம் ஆடிய பார்படாஸ் ராயல்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட்கள் இழப்பிற்கு, 178 ஓட்டங்கள் குவித்தது.
179 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி, 17.5 ஓவர்களில் 3 விக்கெட் மட்டுமே இழந்து, 179 ஓட்டம் எடுத்து வெற்றி பெற்றது.
இதில், ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி வீரர் பொல்லார்ட் 2 பவுண்டரி ஒரு சிக்ஸர் உட்பட 9 பந்துகளில் 19 ஓட்டங்கள் எடுத்தார்.
14,000 ஓட்டங்கள் எடுத்த 2வது வீரர்
இதன் மூலம் T20 போட்டிகளில், 14,000 ஓட்டங்கள் எடுத்த 2வது வீரர் என்ற பெருமையை பொல்லார்ட் பெற்றுள்ளார்.
சக மேற்கு இந்திய அணி வீரரான கிறிஸ் கெயில், 463 போட்டிகளில் விளையாடி, 14,562 ஓட்டங்களுடன் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
பொல்லார்ட், 712 போட்டிகளில் விளையாடி, 1 சதம், 64 அரை சதம் உட்பட 14,000 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.
மேலும், இந்த போட்டியில் ஒரு சிக்ஸர் அடித்ததன் மூலம், 204 சிக்ஸர்களுடன் CPL தொடரில் அதிக சிக்ஸர் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
முன்னதாக, 203 சிக்ஸர்களுடன் எவின் லூயிஸ் இந்த பட்டியலில் முதலிடத்தில் இருந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |