டி20யில் 900 சிக்ஸர்கள் அடித்த பொல்லார்ட்! முதலிடத்தில் யார் தெரியுமா?
மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் கிரோன் பொல்லார்ட் டி20 கிரிக்கெட்டில் 900 சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்தார்.
கிரோன் பொல்லார்ட்
கிரோன் பொல்லார்ட் 2022ஆம் ஆண்டில் ஐபிஎல் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றார். எனினும் பிற லீக் போட்டிகளில் ஆடி வருகிறார்.
தற்போது ILT டி20 தொடரில் MI எமிரேட்ஸ் அணிக்காக கிரோன் பொல்லார்ட் (Kieron Pollard) விளையாடி வருகிறார்.
நேற்று நடந்த டெஸெர்ட் வைப்பர்ஸ் அணிக்கு எதிரானப் போட்டியில், கிரோன் பொல்லார்ட் 23 பந்துகளில் 36 ஓட்டங்கள் விளாசினார். இதில் 3 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகள் அடங்கும்.
இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் 900 சிக்ஸர்கள் என்ற மைல்கல்லை எட்டினார். 900 சிக்ஸர்கள் விளாசிய இரண்டாவது வீரர் எனும் சாதனையை பொல்லார்ட் படைத்தார்.
அவருக்கு முன்பாக கிறிஸ் கெய்ல் 1000 சிக்ஸர்களை கடந்து முதலிடத்தில் உள்ளார். 3வது இடத்தில் ஆந்த்ரே ரஸல் இருக்கிறார்.
அதிக சிக்ஸர்கள் விளாசியவர்கள்:
- கிறிஸ் கெய்ல் (Chris Gayle) - 1056 சிக்ஸர்கள் (455 இன்னிங்ஸ்)
- கிரோன் பொல்லார்ட் (Kieron Pollard) - 901 சிக்ஸர்கள் (613 இன்னிங்ஸ்)
- ஆந்த்ரே ரஸல் (Andre Russell) - 727 சிக்ஸர்கள் (456 இன்னிங்ஸ்)
- நிக்கோலஸ் பூரன் (Nicholas Pooran) - 592 சிக்ஸர்கள் (350 இன்னிங்ஸ்)
- காலின் மன்ரோ (Colin Munro) - 550 சிக்ஸர்கள் (415 இன்னிங்ஸ்)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |