மாதுளை + தேன் தடவினால் ஒரே வாரத்தில் முகம் தகதகவென ஜொலிக்கும்
பொதுவாகவே அனைத்து பெண்களுக்கும் தங்களது சருமத்தை ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் வைத்துக்கொள்வதில் அதிக ஆர்வம் இருக்கும்.
ஒரு பெண்ணிற்கு 30 வயதாகும் போது அப்பெண் அவளுடைய சருமத்தில் பல மாற்றத்தை எதிர்நோக்குவார்.
சருமத்தை எப்போதும் நீரேற்றதுடன் வைத்திருப்பதற்கு தினமும் போதுமானளவு தண்ணீர் அருந்த வேண்டும். இதனால் சருமத்தில் வறட்சி ஏற்படாது.
இவ்வாறு நீங்கள் குறிப்பட்ட ஒரு சில செயல்களை செய்தாலும் சருமத்தில் பல மாற்றங்கள் ஏற்படும். எனவே உங்களுக்கு இலகுவாக கிடைக்கக்கூடிய மாதுளை வைத்து எப்படி சருமத்தை பாதுகாக்கலாம் என பார்க்கலாம்.
சருமத்திற்கு மாதுளை வழங்கும் நன்மைகள்
- சருமத்தை எப்போதும் நீரேற்றதுடன் வைத்திருக்கும்.
- சருமத்தை எப்போதும் இளமையான தோற்றத்துடன வைத்திருக்கும்.
-
சருமத்தை இயற்கையாகவே பளபளப்பாக வைத்திருக்கும்.
-
முகப்பரு மற்றும் அழற்சி போன்ற தோல் பிரச்சினைகளில் இருந்து பாதுகாக்கும்.
- இறந்த செல்களை அகற்றும்.
எப்படி பயன்படுத்தலாம்?
மாதுளை + தேன்
இரண்டு தேக்கரண்டி மாதுளை சாற்றுடன் ஒரு தேக்கரண்டி தேன் கலக்கவும்.
இதை முகத்தில் தடவி 15 முதல் 10 நிமிடங்கள் வரை விட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
மாதுளை + தயிர்
இரண்டு தேக்கரண்டி மாதுளை சாற்றுடன் ஒரு தேக்கரண்டி தயிரை சேர்த்து கலக்கவும்.
இதை முகத்தில் தடவி 15 முதல் 10 நிமிடங்களுக்கு ஊற வைத்துக் கழுவவும்.
மாதுளை + ஓட்ஸ்
இரண்டு தேக்கரண்டி மாதுளை சாற்றுடன் ஒரு தேக்கரண்டி அரைத்த ஓட்ஸை சேர்த்து பேஸ்ட் செய்துக்கொள்ளவும்.
இதை முகத்தில் தடவி 15 முதல் 20 நிமிடங்களுக்கு விட்டு சாதாரண நீரில் கழுவவும்.
மாதுளை + அவகேடோ
1/4 பழுத்த அவகேடோ பழத்தை மசித்து அதில் ஒரு தேக்கரண்டி மாதுளை சாறு சேர்த்து கலந்துக்கொள்ளவும்.
பின் அதை முகத்தில் தடவி 15 முதல் 20 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு சாதாரண தண்ணீரில் கழுவவும்.
மாதுளை + எலுமிச்சை
இரண்டு தேக்கரண்டி மாதுளை சாற்றுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்துக் கலக்கவும்.
பின் அதை கண் பகுதியை தவிர்த்து மற்றைய பகுதியில் தடவி 10 முதல் 15 நிமிடங்களுக்கு காய விட்டு கழுவவும்.
மாதுளை + வெள்ளரி
1/2 வெள்ளரிக்காயில் இரண்டு தேக்கரண்டி மாதுளை சாற்றை சேர்த்து கலக்கவும்.
பின் அதை முகத்தில் 15 நிமிடங்களுக்கு தடவி பின்னர் கழுவவும்.
இந்த முறைகளை வாரத்தில் ஒரு முறை அல்லது இரண்டு முறை பயன்படுத்துவது நல்லது.