சசிகலா புஷ்பா புடவை மாட்டியதை எடுக்க உதவி செய்தேன்.., பொன் பாலகணபதி விளக்கம்
பாஜக நிர்வாகி சசிகலா புஷ்பா உடனான வீடியோ வைரலாகி வரும் நிலையில் பொன் பாலகணபதி விளக்கம் அளித்துள்ளார்.
சர்ச்சை வீடியோ
கடந்த 2022 - ம் ஆண்டு தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவுநாளில் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் பாஜகவினர் அஞ்சலி செலுத்தினர்.
அப்போது, முன்னாள் எம்பியும், பாஜக நிர்வாகியுமான சசிகலா புஷ்பாவை தற்போது திருவள்ளூர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் பாலகணபதி பொதுவெளியில் தவறான ரீதியில் தொடுவது போன்று வீடியோவில் உள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும்,சசிகலா புஷ்பாவின் கணவர் ராமசாமி, தூத்துக்குடி மாவட்ட எஸ்.பியிடம் புகார் தெரிவித்தையடுத்து, விளக்கம் தரக் கோரி தேசிய மகளிர் ஆணையம் பால கணபதிக்கு நோடீஸ் அனுப்பியது.
இந்நிலையில் தான் பாஜகவின் வேட்பாளராக பால கணபதியை நிறுத்தியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பால கணபதி விளக்கம்
இந்த வீடியோ சர்ச்சையான நிலையில் தற்போது செய்தியாளர்களை சந்தித்த பால கணபதி, சசிகலா புஷ்பாவின் சேலை மாட்டிக்கொண்டதால் அதை எடுக்க உதவியதாக தெரிவித்தார்.
அந்த வீடியோவை மார்ஃபிங் செய்து முன்னால் பின்னால் எடிட் செய்து என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
தங்களது சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்க காங்கிரஸ் கட்சிக்கு தைரியம் இல்லாமல் எதிர்க்கட்சியினர் குறித்து ஏதாவது பேசி தவறாக சித்தரித்து பரப்புகிறாரகள்.
இந்த வீடியோ குறித்து சசிகலா புஷ்பா அப்போதே விளக்கம் அளித்து விட்டார். மேலும், தவறாக சித்தரிக்கப்பட்ட வீடியோ என்று மகளிர் ஆணையத்திலும் கூறிவிட்டார்கள் என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |