கோடிகளை குவித்து வைத்திருக்கும் கன்னியாகுமரி வேட்பாளர்கள்.., நாம் தமிழரும் அடங்கும்
கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் கோடீஸ்வரர்களாக உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
கன்னியாகுமரி வேட்பாளர்கள்
மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தமிழக அரசியல் கட்சியினர் அறிவித்துள்ளனர். அந்தவகையில், கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் பொன் ராதா கிருஷ்ணன், அதிமுக சார்பில் பசிலியான் நசரேத், காங்கிரஸ் சார்பில் விஜய் வசந்த் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் மரிய ஜெனிபர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதில், பாஜக, அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
பாஜக வேட்பாளர்
கன்னியாகுமரி மக்களவை தொகுதியின் பாஜக வேட்பாளரான பொன் ராதா கிருஷ்ணனுக்கு ரூ.64,03,778 மதிப்பில் அசையும் சொத்துக்களும், ரூ.6,99, 40,155 மதிப்பில் அசையா சொத்துக்களும் உள்ளன. இதில், இவரது அசையா சொத்துக்கள் பூர்வீக குடும்ப சொத்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக வேட்பாளர்
கன்னியாகுமரி மக்களவை தொகுதியின் அதிமுக வேட்பாளரான பசிலியான் நசரேத்திற்கு ரூ.3,34,77,241 மதிப்பில் அசையும் சொத்துக்களும், ரூ. 4,82,10,790 மதிப்பில் அசையா சொத்துக்களும் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மனைவி பெயரில் ரூ. 1,04,95,000 மதிப்பில் அசையும் சொத்துக்களும், ரூ.9 லட்சம் மதிப்பில் mercedes Benz கார் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாம் தமிழர் வேட்பாளர்
கன்னியாகுமரி மக்களவை தொகுதியின் நாம் தமிழர் வேட்பாளரான மரிய ஜெனிபருக்கு ரூ.2,41,20,999 மதிப்பில் அசையும் சொத்துக்களும், ரூ. 2,13,65,509 மதிப்பில் அசையா சொத்துக்களும் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
இதில், அசையும் சொத்துக்களில் 1000 கிராம் தங்க நகைகள், 70 கிராம் பிளாட்டினம் ஆகியவை உள்ளன. மேலும், கணவரின் பெயரில் ரூ.1,14,23,914 அசையும் சொத்துக்கள் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சி வேட்பாளரான விஜய் வசந்த் இன்னும் வேட்புமனுவை தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |