Jobs: மாதம் ரூ.2,00,000/- சம்பளம்- பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் இருந்து Joint Director General (Legal) மற்றும் Microphotographist ஆகிய பதவிக்கு தகுதியான, விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்பணிக்கு சட்டத்தில் பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். எனவே ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியான 60 நாட்களுக்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
- நிறுவனம்- பாண்டிச்சேரி பல்கலைக்கழகம்
- பணியின் பெயர்- Joint Director General (Legal) மற்றும் Microphotographist
- பணியிடங்கள்- 02
- விண்ணப்பிக்க கடைசி தேதி- Within 60 Days
- விண்ணப்பிக்கும் முறை- Offline
காலிப்பணியிடங்கள்
Joint Director General (Legal) மற்றும் Microphotographist ஆகிய பதவிகளுக்கு தலா ஒரு பணியிடம் என மொத்தம் 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.
கல்வி தகுதி
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து Bachelor Degree in Law முடித்தவர்கள் Joint Director General (Legal) பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
Master Degree in Physics or Chemistry முடித்தவர்கள் Microphotographist பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
சம்பள விவரம்
மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ..449000/- முதல் ரூ.2,09,200 சம்பளம் வழங்கப்பட உள்ளது.
தேர்வு செயல் முறை
விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 60 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |